Published:Updated:

`நான் பேருந்தில்தான் வாழ்கிறேன்; எனக்கு வீடு இல்லை’ - சிறுமிக்கு தோனியின் பதில்!

`நான் பேருந்தில்தான் வாழ்கிறேன்; எனக்கு வீடு இல்லை’ - சிறுமிக்கு தோனியின் பதில்!
`நான் பேருந்தில்தான் வாழ்கிறேன்; எனக்கு வீடு இல்லை’ - சிறுமிக்கு தோனியின் பதில்!

மகேந்திர சிங்தோனி, க்யூட் சிறுமி ஒருவரை கையில் ஏந்திக்கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கும் அந்த சிறுமிக்கும் இடையில் நடந்த ரசிக்கும்படியான கான்வர்சேஷன் வைரலாகி வருகிறது. 

இண்டெர்நெட் உலகை அவ்வப்போதைய தன் நடவடிக்கைகளால் ஈர்ப்பவர் தோனி. அண்மையில் கிரிக்கெட் வீரர்களில் அவரைப்போல, இணைய உலகில் ஆதிக்கம் செலுத்தியவர் யாரும் இல்லை. அவர் விளையாட்டு ஒதுக்கும் நேரத்தைபோல குடும்பத்துக்கு சமமான நேரத்தை ஒதுக்குவார் என்று பரவலாக புகழப்படுவபவர். குழந்தை ஸிவாவுடனான  அவரது வீடியோக்கள் வெளியாகும்போதெல்லாம் ரசிகர்கள் மனதை கொள்ளைகொள்ளும். அண்மையில் அவர் ஸிவாவுடன் நடனம் ஆடும் வகையிலான வீடியோ வெளியானது. செம்ம க்யூட் என கூறி  வீடியோவை ரசிகர்களால் வைரலானது. தொடர்ந்து மனைவி சாக்ஸிக்கு காலணியை மாட்டிவிடும் புகைப்படம் வெளியானது.

அந்த புகைப்படத்துக்கு, `தோனி நீங்கள் செய்தால்; நாங்களும் செய்யவேண்டியிருக்கும்’ என ரசிகர்கள் தங்கள் காதலிக்களுக்கு பயந்து கமெண்ட் செய்தனர். இந்நிலையில் தோனியின் மீண்டுமொரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுமி ஒருவரை கையில் ஏந்தி நிற்கிறார் தோனி. அப்போது அந்த சிறுமி, `நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்’ என்று கேட்கிறாள். அதற்கு தோனி, `எனக்கு வீடில்லை; நான் பஸ்ஸில் தான் வாழ்கிறேன்’ என்கிறார். உன் வீடு எங்கே இருக்கிறது என்று தோனி கேட்க, `பக்கத்தில் தான் இருக்கிறது’ என்கிறாள் அந்த சிறுமி. இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோவை ரசிகர்கள் பெரும் அளவில் ரசித்து ஷேர் செய்து வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Main bus me hi rehta hoon #Msdhoni

A post shared by Sakshi Singh Dhoni FC (@_sakshisingh_r) on