Published:Updated:

துரத்திய நாய்... தூக்கிவீசப்பட்ட இளைஞர்... பிறந்தநாளில் நண்பர்கள் கண்முன் நடந்த சோகம்

துரத்திய நாய்... தூக்கிவீசப்பட்ட இளைஞர்... பிறந்தநாளில் நண்பர்கள் கண்முன் நடந்த சோகம்
துரத்திய நாய்... தூக்கிவீசப்பட்ட இளைஞர்... பிறந்தநாளில் நண்பர்கள் கண்முன் நடந்த சோகம்

பிலிபைன்ஸில் நான்கு தினங்களுக்கு முன்பு கார் மோதி ஒரு இளைஞர் உயிரிழந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிலிபைன்ஸ் நாட்டின் மணிலாவில் உள்ள கியூஸான் நகரில் கடந்த 4-ம் தேதி நள்ளிரவு சில இளைஞர்கள் ஒரு தெருவில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் ஒரு நாய் இவர்களைக் கண்டு குரைத்துக்கொண்டே இருந்துள்ளது. இந்த இளைஞர்கள் நாயைத் துரத்துவது போலச் சைகை செய்யவே அந்த நாய் உடனடியாக இளைஞர்களைவிடாமல் துரத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் ஓடிச் சென்று தெருவின் முனையில் திரும்பும்போது எதிரில் வந்த கார் ஒன்று இளைஞர் ஒருவரின் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. இதில் இன்னொரு சோக சம்பவம் என்னவென்றால் விபத்தில் இறந்த ஜோஷுவா (Joshua) என்ற 20 வயது இளைஞருக்கு அன்றைய தினம்தான் பிறந்தநாள். தன் பிறந்தாளை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் உணவு வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் செல்லும் வழியில்தான் விபத்து நிகழ்ந்துள்ளது. 

விபத்து குறித்து ஜோஷிவாவின் நண்பர் க்றிஷா (Chrisha) கூறும்போது, “ஜோஷுவா தற்போதுதான் கல்லூரியில் படித்து வருகிறான். வரும் ஜூன் மாதம் நிறைவடைந்தால் அவர் பட்டதாரியாகிவிடுவான். அவனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நாங்கள் செல்லும்போது ஒரு நாய் துரத்தியதால் நாங்கள் ஓடினோம். அப்போது எதிரே வந்த கார் மோதி ஜோஷூவா தூக்கிவீசப்பட்டு இறந்துவிட்டான்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், க்றிஷாதான் வைரலான வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக ஜோஷுவா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அன்று தன் பிறந்தாள் தொடர்பாகப் பதிவை வெளியிட்டிருந்தார். அதில், ‘இன்று என் பிறந்த நாள். நான் என் 20-வது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். ஆனால், நான் இன்னும் குழந்தையாக இருப்பதாகவே கருதுகிறேன். என் வாழ்நாளில் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்க உள்ளேன். எனக்கு வழிகாட்ட நிறைய மக்கள் உள்ளனர். என் நண்பர்களுக்கு நான் எப்போதும் உண்மையாக உள்ளேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.