Published:Updated:

’போலீஸ், போலீஸ்’ - கடத்தல்காரர்களைக் காப்பாற்ற காவல் துறையினரை கடுப்பேற்றிய கிளி

கலிலுல்லா.ச
’போலீஸ், போலீஸ்’ - கடத்தல்காரர்களைக் காப்பாற்ற காவல் துறையினரை கடுப்பேற்றிய கிளி
’போலீஸ், போலீஸ்’ - கடத்தல்காரர்களைக் காப்பாற்ற காவல் துறையினரை கடுப்பேற்றிய கிளி

போதைப்பொருள் கடத்தியவர்களைக் காப்பாற்றிய கிளியைக் காவல்துறையினர் கைது செய்த நிகழ்வு சுவாரஸ்யத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலில் உள்ள பியாயு மாகாணத்தில், ஒரு குறிப்பிட்ட குழுவினர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். அவர்களைப் பிடிப்பது காவல்துறையினருக்கு சவால் மிகுந்ததாக இருந்தது. காரணம் ஒவ்வொரு முறை காவல்துறையினர் பிடிக்க வரும்போதும், அவர்கள் நேக்காக எஸ்கேப் ஆகிக்கொண்டிருந்தனர். அதேபோல இந்த முறையும் காவல்துறை அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் களமிறங்கியது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருக்கும் இடத்துக்குள் காவல்துறையினர் நுழைந்தவுடன், கடத்தல்காரர்களால் வளர்க்கப்படும் கிளி `போலீஸ் போலீஸ்’ என்று கத்தி காட்டிக்கொடுத்துவிட்டது.

இதனால் கடத்தல்காரர்கள், தப்பிச்செல்ல கிளி உதவியுள்ளது. அந்தக் கிளிக்கு இவ்வாறு சொல்ல பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுப்பான காவல்துறையினர் கிளியை கூண்டோடு, காவல்நிலையத்துக்கு தூக்கிச்சென்றுவிட்டனர். பின்னர் அதனிடம் விசாரணை நடத்த முயன்றபோது, கிளி வாயையே திறக்கவில்லை. எதுவும் பேசாமல் மௌனம் சாதித்துள்ளது. அந்தக் கிளி உள்ளூர் விலங்கு காட்சி சாலையில் விட்டு 3 மாதங்களுக்குப் பிறகு ரீலிஸ் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. குற்றவாளியைக் கிளி காப்பாற்றியது இது முதன்முறையல்ல. இதுபோன்று கடந்த 2010-ம் ஆண்டு கொலம்பியாவில் குற்றவாளி ஒருவரை பிடிக்கச் சென்றபோது அவர் வீட்டிலிருந்த லோரன்சோ என்ற கிளி, தன் ஓனரை காப்பாற்றும் வகையில், `ஓடு ஓடு!’ என்று எச்சரிக்கை செய்து தப்பிக்க உதவியுள்ளது. இதுபோன்று தங்கள் உரிமையாளரைக் காப்பாற்ற பயிற்சி அளிக்கப்பட்டுள்ள 1,700 பறவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.