Published:Updated:

`ஒரு பேப்பரைத்தான் காட்டினார், வாயடைத்துப்போனார்!'- ஓட்டு கேட்ட நடிகரை பதறவைத்த நபர்

சத்யா கோபாலன்
`ஒரு பேப்பரைத்தான் காட்டினார், வாயடைத்துப்போனார்!'- ஓட்டு கேட்ட நடிகரை பதறவைத்த நபர்
`ஒரு பேப்பரைத்தான் காட்டினார், வாயடைத்துப்போனார்!'- ஓட்டு கேட்ட நடிகரை பதறவைத்த நபர்

சண்டிகரில் தன் மனைவிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் செல்லும்போது பாலிவுட் நடிகர் அனுபம் கெர், கடைக்காரர் காட்டிய ஒரு பேப்பரால் வாயடைத்துப் போய்விட்டார். 

`ஒரு பேப்பரைத்தான் காட்டினார், வாயடைத்துப்போனார்!'- ஓட்டு கேட்ட நடிகரை பதறவைத்த நபர்

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெரும் அவரின் மனைவி கிரண் கெரும் தற்போது பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர். அனுபமின் மனைவி கிரண், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் சண்டிகரில் போட்டியிடுகிறார். இதனால் இந்த இருவரும் சண்டிகர் முழுவதும் பல இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று சண்டிகரில் வீடு வீடாக நடந்து வாக்கு சேகரித்தார் நடிகர் அனுபம். அப்போது அவர் ஒரு கடைக்குள் சென்று அங்கிருந்தவர்களிடம் பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள் எனக் கேட்டார். அதற்கு எதிரில் இருந்த கடைக்காரர். ஒரு பேப்பரை அனுபம் முன் நீட்டி சில கேள்விக் கேட்டுள்ளார். அதைப் பார்த்ததும் திகைத்துப் போன நடிகர் மறுவார்த்தை பேசாமல் அந்தக் கடையை விட்டுச் சென்றுவிட்டார். கடைக்காரர் காட்டிய பேப்பர் வேறு ஒன்றும் இல்லை. 2014-ம் வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க அளித்த தேர்தல் வாக்குறுதிகள்தான். அனுபம் வாக்கு சேகரிக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அவரையும் பா.ஜ.க-வினரையும் நெட்டிசன்கள் கேலியாக விமர்சித்து வருகின்றனர். 

Vikatan