Published:Updated:

`அன்று மட்டும் இந்த டர்பனை அணிந்திருந்தால்.. மீண்டு வா நேசா!’ - உருகும் ஹர்பஜன் #Pray_for_Neasamani

சத்யா கோபாலன்
`அன்று மட்டும் இந்த டர்பனை அணிந்திருந்தால்.. மீண்டு வா நேசா!’ - உருகும் ஹர்பஜன் #Pray_for_Neasamani
`அன்று மட்டும் இந்த டர்பனை அணிந்திருந்தால்.. மீண்டு வா நேசா!’ - உருகும் ஹர்பஜன் #Pray_for_Neasamani

நேசமணிக்காக ரத்தம் கொடுக்கும் ரொனால்டோ, நேசமணியைக் காப்பாற்றவில்லை என்றால் மூன்றாம் உலகப் போர் வரும் என கூறும் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன். நேசமணியின் நிலைக்குக் காரணமான கிருஷ்ணமூர்த்தியின் பாஸ்போர்ட் முடக்கம். இப்படி நேசமணிக்காக பொங்கிக்கொண்டிருக்கிறது ஒரு பெரும் கூட்டம். 

`அன்று மட்டும் இந்த டர்பனை அணிந்திருந்தால்.. மீண்டு வா நேசா!’ - உருகும் ஹர்பஜன் #Pray_for_Neasamani

அப்படி என்னதான் ஆச்சு நேசமணிக்கு? `Civil Engineering Learners' என்ற ஃபேஸ்புக் பக்கத்தில்தான் இது ஆரம்பித்தது. பாகிஸ்தானிலிருந்து இயங்கும் இந்தப் பக்கம் ஒரு சுத்தியல் படத்தைப் பதிவிட்டு `உங்கள் ஊரில் இதற்கு என்ன பெயர்' எனக் கேட்க விக்னேஷ் என்பவர், `இதன் பெயர் சுத்தியல், இதை எதிலாவது அடித்தால் டங் டங் எனச் சத்தம் வரும். பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலை இதனால்தான் உடைந்தது. பாவம்' எனப் பிரபல ப்ரண்ட்ஸ் பட காமெடி சீனை நினைவுபடுத்தி கமென்ட்டிட்டார்.

`அன்று மட்டும் இந்த டர்பனை அணிந்திருந்தால்.. மீண்டு வா நேசா!’ - உருகும் ஹர்பஜன் #Pray_for_Neasamani

அவ்வளவுதான் தமிழகம் தொடங்கி இந்தியா, உலகம் முழுவதும் உள்ள மக்கள் நேசமணிக்காக ப்ரே செய்ய தொடங்கிவிட்டனர். நேற்று முதல் #Pray_For_Neasamani’ என்ற ஹாஸ்டாக் இந்திய அளவில் பயங்கர டிரெண்டாகி வருகிறது. இதற்குப் பலரும் ஜாலியாகவும், சீரியஸாகவும் கமென்ட் செய்து வருகின்றனர். நேசமணிக்கு விரைவில் சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனையில் நடக்கும் நிலவரத்தை ஊடகங்கள் லைவ் செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் சமூகவலைதளத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர். 

நேசமணி டிரெண்ட் ஆன பிறகு யார் இந்த நேசமணி? எனப் பலரும் கூகுளைத் தேடி ஓடத் தொடங்கிவிட்டனர். கூகுளில்  Who is என டைப் செய்து முடிப்பதற்குள் நேசமணிதான் முதலில் வந்து நிற்கிறார். அவருக்கு அடுத்தபடியாகத்தான் நரேந்திர மோடி போன்ற பிற தலைவர்கள் பெயர்கள் உள்ளன. 

`அன்று மட்டும் இந்த டர்பனை அணிந்திருந்தால்.. மீண்டு வா நேசா!’ - உருகும் ஹர்பஜன் #Pray_for_Neasamani

இதையெல்லாம் தாண்டி இந்திய கிரிக்கெர் வீரர் ஹர்பஜன் சிங்கும் நேசமணிக்காக ப்ரே செய்துள்ளார். ``என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

`அன்று மட்டும் இந்த டர்பனை அணிந்திருந்தால்.. மீண்டு வா நேசா!’ - உருகும் ஹர்பஜன் #Pray_for_Neasamani
Vikatan