Published:Updated:

'நீ போகாத நான் போய் எடுத்துட்டு வர்றேன்'... நாயின் நேசத்தால் வைரலான வீடியோ

மு.ராஜேஷ்
'நீ போகாத நான் போய் எடுத்துட்டு வர்றேன்'... நாயின் நேசத்தால் வைரலான வீடியோ
'நீ போகாத நான் போய் எடுத்துட்டு வர்றேன்'... நாயின் நேசத்தால் வைரலான வீடியோ
'நீ போகாத நான் போய் எடுத்துட்டு வர்றேன்'... நாயின் நேசத்தால் வைரலான வீடியோ

மனிதன் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் நாய்க்கு எப்போதும் தனி இடமுண்டு. தன்னை வளர்ப்பவரைப் பாதுகாப்பதில் எப்போதும் நாய்கள் முன்னிலையில் இருக்கும். விபத்துகளிலிருந்து நாய்கள் மனிதர்களைக் காப்பாற்றிய சம்பவங்கள் உலகம் முழுக்க பல இடங்களில் நடந்திருக்கின்றன. அப்படி நீர்நிலையின் அருகே செல்லும் ஒரு குழந்தையை நாய் ஒன்று பாதுகாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Physics-astronomy.org என்ற ட்விட்டர் கணக்கில் கடந்த 16-ம் தேதி பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ இதுவரை 4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. அதை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ரீட்வீட் செய்திருக்கிறார்கள், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதை லைக் செய்திருக்கிறார்கள்.

16 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் ஒரு குழந்தை, நீர்நிலையில் மிதந்துகொண்டிருக்கும் பந்தை எடுக்க முயற்சி செய்கிறது. அதைப் பார்த்தவுடன் நாய் அந்தக் குழந்தையைப் பின்னால் இழுத்துவிட்டு அது போய் பந்தை எடுத்து வருகிறது. 'இதைப் பற்றி ஒரு வார்த்தை' எனக் குறிப்பிடப்பட்டுள்ள அந்த வீடியோவுக்குக் கீழே பலரும் அந்த நாயைப் பற்றிப் பாராட்டி வருகிறார்கள். வெளிநாடுகளில் நாய்களுக்குக் குழந்தைகளைப் பாதுகாக்கப் பயிற்சியளித்திருப்பார்கள். ஒருவேளை இந்த நாயும் பயிற்சி பெற்றிருக்கலாம் அதனால் கூட குழந்தை நீருக்குள் செல்வதைத் தடுத்திருப்பதற்கான வாய்ப்புண்டு. உங்களுக்கும் இதேபோல ஏதாவது அனுபவம் இருக்கிறதா ? அதை இங்கே பகிருங்கள்.
 

Vikatan