Published:Updated:

"இது என்னுடைய பத்து வருட உழைப்பு..."- மஹிந்திரா XUV700 காரை வாங்கிய நபரை வாழ்த்திய ஆனந்த் மஹிந்திரா!

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா, சாமானிய மக்களின் திறமைகளைப் பாராட்டவும், பகிரவும் தயங்கியதே இல்லை. அந்த வகையில் மஹிந்திரா XUV700 காரை வாங்கி நபரைப் பாராட்டியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, சமீபகாலமாக சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இவர் எப்போதும் சாமானிய மக்களின் திறமைகளைப் பாராட்டவும், பகிரவும் தயங்கியதே இல்லை. அந்த வகையில் அண்மையில் அசோக்குமார் என்பவர் கார் வாங்கவேண்டும் என்ற ஆசையுடன் 10 வருடங்கள் கடுமையாக உழைத்து மஹிந்திரா புதிதாக அறிமுகப்படுத்திய XUV700 காரை வாங்கியுள்ளார்.

இதை மகிழ்ச்சியுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அசோக்குமார், இதற்கு ஆனந்த் மஹிந்திராவின் வாழ்த்து வேண்டும் என்று கேட்டுள்ளார். இதைக் கண்ட ஆனந்த் மஹிந்திரா அவரது டிவிட்டர் பதிவிற்கு ரிப்ளை செய்து, "நன்றி, ஆனால் இந்தக் காரை வாங்கியதன் மூலம் எங்களை ஆசீர்வதித்தவர் நீங்கள்தான்... கடின உழைப்பால் கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!