Published:Updated:

குடிபோதையில் மும்பையிலிருந்து பெங்களூரு ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்த பெண்; வைரலான பிரியாணி போஸ்ட்!

பிரியாணி

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் குடிபோதையில் மும்பையிலிருந்து பெங்களூரு உணவு விடுதியில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.

குடிபோதையில் மும்பையிலிருந்து பெங்களூரு ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்த பெண்; வைரலான பிரியாணி போஸ்ட்!

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் குடிபோதையில் மும்பையிலிருந்து பெங்களூரு உணவு விடுதியில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.

Published:Updated:
பிரியாணி

பொதுவாகப் பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். கடந்த ஆண்டு இந்தியாவில் ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கியில் அதிக அளவு ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணிதான். இந்நிலையில் பிரியாணியை வைத்தே நிகழ்ந்த சம்பவம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

மும்பையைச் சேர்ந்த சுபி என்ற பெண் தன்னுடைய வீட்டில் மது அருந்தியிருக்கிறார். மது அருந்தி முடித்ததும் வீட்டில் சாப்பிட உணவு எதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்திருக்கிறார். ஆனால் வீட்டில் சாப்பாடு எதுவுமில்லை.

பிரியாணி
பிரியாணி

உடனே ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய முடிவெடுத்து, மொபைல் ஆப்பில் பிரியாணியைத் தேர்வு செய்திருக்கிறார். ஆனால், போதையில் பிரியாணியை எங்கு ஆர்டர் செய்கிறோம் என்று தெரியாமல் ஏதோவொரு உணவு விடுதியைத் தேர்வு செய்து ஆர்டர் செய்திருக்கிறார்.

ஆனால் உண்மையில் அவர் தேர்வு செய்த ஹோட்டல் மும்பையில் இல்லை. வெகு தொலைவில் பெங்களூருவில் இருந்திருக்கிறது. மும்பையிலிருந்து கொண்டு பெங்களூரு ஹோட்டலில் பிரியாணி ஆர்டர் செய்ததால் அதற்குக் கூடுதல் கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்பட்டிருக்கிறது. டெலிவரியும் அடுத்த நாள் எனக் காட்டியிருக்கிறது. அதன் பிறகுதான் பெங்களூரு ஹோட்டலில் பிரியாணி ஆர்டர் செய்ததை அப்பெண் உணர்ந்திருக்கிறார். ஆனால் பிரியாணி ஆர்டர் அதற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது. உடனே அந்த ஆர்டரை அப்படியே ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உணவு ஆர்டர் குறித்த ஸ்க்ரீன்ஷாட்
உணவு ஆர்டர் குறித்த ஸ்க்ரீன்ஷாட்
பெங்களூருவிலிருந்து வந்த பிரியாணி
பெங்களூருவிலிருந்து வந்த பிரியாணி

அதில் குடிபோதையில் பெங்களூருவில் பிரியாணி ஆர்டர் செய்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். உடனே, "உங்கள் வீட்டு வாசலில் ஆர்டர் கிடைத்ததும் உங்கள் அனுபவத்தைப் பற்றி எங்களுக்குத் தெரிவியுங்கள்" என்று இவர் ஆர்டர் செய்த ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் இவருக்குப் பதிலளித்துள்ளது. சிலர் எப்படி இப்படியொரு ஆர்டரை அந்த உணவு டெலிவரி நிறுவனம் ஏற்றுக்கொள்ளலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுபி தனது பிரியாணி ஆர்டர் வீட்டிற்கு வந்ததும் அதையும் போட்டோ எடுத்து தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.