Published:Updated:

"எனது இறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டது"- அஸ்ஸாமில் வைரலாகும் பத்திரிகை விளம்பரம்

இறப்பு ( For Representation Only )

அஸ்ஸாமில் ஒருவர் கொடுத்துள்ள விளம்பரம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. தனது இறப்புச் சான்றிதழ் காணாமல் போய்விட்டதாக அவர் அந்த விளம்பரத்தில் தெரிவித்துள்ளார்.

"எனது இறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டது"- அஸ்ஸாமில் வைரலாகும் பத்திரிகை விளம்பரம்

அஸ்ஸாமில் ஒருவர் கொடுத்துள்ள விளம்பரம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. தனது இறப்புச் சான்றிதழ் காணாமல் போய்விட்டதாக அவர் அந்த விளம்பரத்தில் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
இறப்பு ( For Representation Only )

பத்திரிகையில் வெளியாகும் விளம்பரங்கள் சில நேரங்களில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதுண்டு. அது போன்ற ஒரு விளம்பரம் அஸ்ஸாமில் வெளியாகி இருக்கிறது. அந்த விளம்பரம் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக இருந்தது.

அந்த விளம்பரத்தைக் கொடுத்தவர், தனது இறப்புச் சான்றிதழ் 07/09/2022 அன்று காணாமல் போய்விட்டதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறார். இறப்புச் சான்றிதழின் பதிவு எண் மற்றும் சீரியல் நம்பரையும் அதில் பதிவிட்டுள்ளார். அந்த விளம்பரத்தை ஐஏஎஸ் அதிகாரி ருபின் சர்மா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவைப் பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தங்களது கருத்தைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் விளம்பரம் கொடுத்துள்ள நபர் சொர்க்கத்திலிருந்து உதவி கேட்கிறாரா என்று கேட்டுள்ளார். வேறு சிலர் தொலைந்து போன பொருள் கிடைத்தால் எங்குத் தொடர்பு கொள்வது என்று நகைச்சுவையுடன் கேட்டுள்ளனர். மற்றொருவர் காணாமல் போன பொருள் கிடைத்தால் அதனைச் சொர்க்கத்திற்கு அனுப்பவா அல்லது நரகத்திற்கு அனுப்பவா என்று கேள்வி கேட்டுள்ளார்.

இறப்புச் சான்றிதழ் குறித்த பத்திரிகை விளம்பரம்
இறப்புச் சான்றிதழ் குறித்த பத்திரிகை விளம்பரம்

மற்றொருவர் முதல் முறையாக ஒருவர் தனது இறப்புச் சான்றிதழை இழந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் தனது பதிவில், "ஒருவர் தனது சொந்த இறப்புச் சான்றிதழை இழந்துள்ளார். யாராவது அதைக் கண்டுபிடித்தால் உடனே அவரிடம் இறப்புச் சான்றிதழைத் திரும்பக் கொடுக்கவும். கொடுக்காவிட்டால் பேய் கோபப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம் கொடுத்தவர் பிறப்புச் சான்றிதழ் என்று கொடுத்திருக்கவேண்டும் என்று தெரிகிறது. ஆனால் அதனை இறப்புச் சான்றிதழ் என்று தவறுதலாகக் குறிப்பிட்டுவிட்டதாகத் தெரிகிறது. எது எப்படியோ, விளம்பரம் கொடுத்த ரஞ்சித் குமார் என்ற அந்த நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார்.