Published:Updated:

பிரேசில்: `தெருநாய்க்கு ஐடியுடன் கார் விற்பனையாளர் பணி!’ - வைரலாகும் புகைப்படம்

நாய்
நாய்

``சமூக வலைதள செலிபிரிட்டியாக மாறிய டக்சனுக்கு தனியாக இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மனிதர்களுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் இடையிலான அன்பு சில நேரங்களில் மிகவும் நெகிழ வைக்கும். அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக நடக்கும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவ்வப்போது வைரலாவதும் உண்டு. அப்படியான ஒரு சம்பவம்தான் இப்போது நடந்துள்ளது. பெரும்பலும் வீட்டில் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணியைப் பற்றிய சம்பவங்கள்தான் வெளியே வருவது உண்டு. ஆனால், தற்போது நடந்துள்ள சம்பவம் தெரு நாயை மையமாகக் கொண்டது. அப்படி அது என்ன சம்பவமாக இருக்கும்?

நாய்
நாய்

பிரேசிலில் எஸ்பிரிட்டோ சேண்டா மாநிலத்தில் உள்ள செர்ரா எனும் பகுதியில் ஹூண்டாய் ஷோ ரூம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஷோ ரூமுக்கு வெளியே நாய் ஒன்று வசித்து வந்துள்ளது. அதுமட்டுமல்லாது, விரைவிலேயே அந்த ஷோ ரூம் ஊழியர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகி நட்பையும் உருவாக்கியுள்ளது. இந்த நட்பை கௌரவிக்கும் விதமாக ஊழியர்கள் தங்களது குடும்பத்தில் ஒருவராக அதை சேர்த்துக்கொண்டு கௌரவ ஊழியர் பொறுப்பையும் வழங்கியுள்ளனர். அதற்கான அடையாள அட்டை ஒன்றையும் நாய்க்கு வழங்கியுள்ளனர். அடையாள அட்டையை அணிந்தபடி அந்த நாய் நிற்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

`அ.தி.மு.க பிரமுகரின் உயிரைக் காப்பாற்றிய நாய்!' -தேர்தல் விரோதத்தில் நடந்த நள்ளிரவு தாக்குதல்

டக்சன் பிரைம் என்ற பெயருடைய அந்த நாயானது கடந்த மே மாதம் தத்தெடுக்கப்பட்டதாகவும் தற்போது கார் விற்பனையாளராகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு பிரேசிலில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்தது. இதையடுத்து, நெட்டிசன்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமூக வலைதள செலிபிரிட்டியாக மாறிய டக்சனுக்கு தனியாக இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30,000 பேர் அந்தக் கணக்கை பின்தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தக் கணக்கில் டக்சன் செய்யும் அட்டகாசங்கள் உட்பட பல புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

நாய்
நாய்

கொரோனா காலத்தில் வேலையில்லமல் பலரும் திண்டாடிக் கொண்டிருக்கும்போது நாய்க்கு வேலை கொடுக்குறாங்க என ஒரு பக்கம் புலம்பல்கள் இருந்தாலும், ``டக்சனுக்கு ஐடி கார்ட் அணிந்ததும் எவ்வாறு போஸ் கொடுக்க வேண்டும் என்று தெரிந்துள்ளது; மிகவும் அழகான கதை; டக்சனுக்கு வாழ்த்துகள்” எனப் பல்வேறு கமென்டுகள் டக்சனைப் பாராட்டும் வகையில் குவிந்த வண்ணம் உள்ளன. இனி அந்த ஷோ ரூமுக்கு கார் வாங்க சென்றால் டக்சன் மக்களை வரவேற்கும்.!

`ஆன்லைன்ல 5,000 ரூபாய், அதனால நாங்களே பண்ணிட்டோம்!' -கால்களை இழந்த நாய்; நெகிழவைத்த ஏழைத் தம்பதி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு