மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா சமீப காலமாக தினமும் ஊக்கமூட்டும் கதைகளையும் புகைப்படங்ககளையும் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று (திங்கள் கிழமை) #MondayMotivation என்ற ஹேஷ்டேக்கில் ‘கனவுகளைப் பெரிதாக காணுவோம் (Dream Big)’ என்று தலைப்பிட்டு ஒரு கடையின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படத்தில் இருந்த சாலையோர கடையில் பிரபல ஒபராய் ஹோட்டலின் (Oberoi Hotel) பெயரை அந்தக் கடைக்கு வைத்து ‘எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை’ என்று குறிப்பிட்டு எழுதப்பட்டு இருந்தது.
சிறிய கடை என்றாலும் பெரிய கனவுகளுடன் தொடங்கி உள்ளனர் என்ற அர்த்தத்தில் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த இந்தப் புகைப்படம் போலியானது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும் இந்தக் கடையின் உண்மையான படத்தைப் பகிர்ந்து ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த படம் போட்டோஷாப் செய்யப்பட்ட போலியான படம் என்று பதிவிட்டு வருகின்றனர்.