Published:Updated:

ஆட்டோ, காரைப் பந்தாடியது! - பீகார் மார்க்கெட்டைப் பதறவைத்த `கோபக்காரக் காளை' #ViralVideo

பீகாரின் மார்க்கெட் பகுதியில் காளை ஒன்று வாகனத்தை பந்தாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காளை அட்டகாசம்
காளை அட்டகாசம்

பீகாரின் ஹஜிபூர் மார்க்கெட் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த காளை திடீரென ஆக்ரோஷமாக மாறி வாகனங்களைத் தாக்கத்தொடங்கியது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், `காளை முதலில் சாலையின் ஓரமாக நின்றிருந்த ஆட்டோ ரிக்‌ஷாவின் மீது தனது ஆக்ரோஷத்தைக் காட்டுகிறது. அந்த வாகனத்தை முட்டி மோதி கீழே தள்ளியது. சாலைக்கு வந்து ஒரு தள்ளுவண்டியை மோதி கீழே தள்ளுகிறது. அந்த வண்டியைத் தன் கொம்புகளால் முட்டி சாலையில் தள்ளிக்கொண்டு செல்கிறது.

ஆட்டோ, காரைப் பந்தாடியது! - பீகார் மார்க்கெட்டைப் பதறவைத்த `கோபக்காரக் காளை' #ViralVideo

அப்போது ஒரு போலீஸ் வாகனம் அந்தப் பகுதியை வேகமாகக் கடக்கிறது. சாலையில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சாலையில் இருந்த சிறு கடைகளையும் அந்தக் காளை சேதப்படுத்துகிறது. காளையின் அட்டகாசத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் சிலர் தங்களது மொபைல் போன்களில் இதைப் படம் பிடிக்கின்றனர். வாகனங்கள் வரிசையாக சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.

`இப்படியொரு ஆட்டத்தைப் பார்த்ததில்லை!'- காரின் நடுவில் அமர்ந்த யானை; அச்சப்பட்ட பயணிகள் #Viralvideo

மார்க்கெட் சாலையிலிருந்து சிறிது தூரம் வந்த மாடு ஒரு மாருதி காரின் மீது தனது ஆக்ரோஷத்தைக் காட்டியது. காரை அப்படியே தனது கொம்புகளால் முட்டித் தூக்கியது. காருக்குள் இருந்த நபர் வாகனத்தை அங்கிருந்து எடுக்க முயல்கிறார். ஆனால், அவரது முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை வாகனத்தைத் தொடர்ந்து தாக்குகிறது. குழந்தைகள் விளையாட்டுப் பொம்மைகளை பந்தாடுவதுபோல் செய்துகொண்டிருந்தது. இதையடுத்து அங்கிருந்த ஒருவர் காளையின் மீது தண்ணீரைத் தெளித்தார். சிலர் தடியைக் கொண்டு வந்த மிரட்ட அந்த வாகனத்தைவிட்டு நகர்ந்து செல்வதோடு அந்த வீடியோ முடிந்தது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் கூறுகிறது.