Published:Updated:

`ட்விட்டரில் டிரெண்டாகும் அந்தோனி ஹோய்ட்டின் ஃபெஸ்டிவல் பயணம்!’ - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதுதான் நான் பயணம் செய்த அதிக தூரம். எல்லாவற்றையும் எளிதாகத் திட்டமிட்டுவிடலாம். திட்டமிட்டப் பணிகளைச் செயல்படுத்தி முடிக்கும்வரை, நாம் திட்டமிட்டது வேலை செய்யுமா, இல்லையா என்பது தெரியாது.

அந்தோனி ஹோய்ட்
அந்தோனி ஹோய்ட்

அந்தோனி ஹோய்ட், இங்கிலாந்திலுள்ள செல்டென்ஹாம் என்னும் நகரைச் சேர்ந்தவர். ஹோய்டின் ஃபெஸ்டிவல் செலிபிரேஷன் மோட் கொஞ்சம் வித்தியாசமானது. இங்கிலாந்தின் குறுகலான பாதைகளில் சைக்கிளில் பயணம் செய்து, அந்தப் பாதைகளை இணைத்து இமேஜ் ஒன்றை உருவாக்குகிறார். தன்னுடைய ’ஃபிட்னஸ் டிராக்கர்’ ஆப்பில் பதிவாகும் அந்த இமேஜை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுப் பாராட்டுகளையும் லைக்ஸ்களையும் அள்ளுகிறார்.

Santa Claus
Santa Claus

கடந்த சில வருடங்களாக கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பயணம் செய்து உருவான இமேஜைப் பதிவு செய்கிறார். பனிமனிதன், கிறிஸ்துமஸ் தாத்தா, பறவைகளின் கூட்டம் ஆகியவற்றை தனது பயணத்தில் உருவாக்கியிருக்கிறார். இந்த வருடம் மேற்கு லண்டனில் உள்ள ஹேமர்ஸ்மித் முதல் யூஸ்டன் வரை 9 மணிநேரம், சுமார் 79 மைல்கள் பயணம் செய்து கலைமான் இமேஜை உருவாக்கியுள்ளார்.

`தினமும் 45 கி.மீட்டர்; நெஞ்சோடு அணைத்தபடி குழந்தை' - உபர் டெலிவரி பெண்ணின் நெகிழ்ச்சிப் பயணம்

``It's that time of the year again when I cycle round congested streets in the rain looking for some festive cheer!” என்ற கேப்ஷனுடன் இமேஜை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் ``Annual christmas image" என்ற தலைப்பில் நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

reindeer
reindeer

சைக்கிளிங்கை முடித்தபின்னர் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அந்தோனி ஹோய்ட் அளித்த பேட்டியில் ``நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதுதான் நான் பயணம் செய்த அதிக தூரம். எல்லாவற்றையும் எளிதாகத் திட்டமிட்டுவிடலாம். திட்டமிட்டப் பணிகளைச் செயல்படுத்தி முடிக்கும்வரை, நாம் திட்டமிட்டது வேலை செய்யுமா, இல்லையா என்பது தெரியாது.

வரைபடங்களில் ஏதாவது ஷேப் தெரிகிறதா எனப் பார்த்துக்கொண்டிருப்பேன். மூக்கு மாதிரி ஷேப் தெரிந்தால், உடனே அதனருகில் கண்களைத் தேடுவேன். மேகங்களில் வடிவங்களைப் பார்க்கிற பாணிதான். கொஞ்சம் ட்ரிக்கியானதும்கூட.” என்று கூறியிருந்தார்.