Published:Updated:

"புதுசு புதுசா யோசிக்கிறாங்களே..." - திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சிட்ட விருதுநகர் ஜோடி

அழைப்பிதழ்

திருமணத்திற்காக வெளியூரிலிருந்து வருபவர்கள் எளிதாகத் திருமண மண்டபத்தை அடைய 'QR கோடு' மூலமாக வழிகாட்டும் வகையிலும் அச்சிட்டுள்ளனர்.

"புதுசு புதுசா யோசிக்கிறாங்களே..." - திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சிட்ட விருதுநகர் ஜோடி

திருமணத்திற்காக வெளியூரிலிருந்து வருபவர்கள் எளிதாகத் திருமண மண்டபத்தை அடைய 'QR கோடு' மூலமாக வழிகாட்டும் வகையிலும் அச்சிட்டுள்ளனர்.

Published:Updated:
அழைப்பிதழ்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளைக்கோட்டையைச் சேர்ந்தவர் விஜயன். இவருக்கும், திருநகரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராணி என்பவருக்கும் நாளை மறுநாள் (செப்டம்பர் 5-ம் தேதி) திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான‌ அழைப்பிதழை வித்தியாசமான முறையில் வழங்க எண்ணிய மணமக்கள், தங்களின் திருமண அழைப்பிதழை ஆதார் அட்டை வடிவில் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கியுள்ளனர். இது உறவினர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆதார் அழைப்பிதழ்
ஆதார் அழைப்பிதழ்

மணமக்கள் விஜயன் - ஜெயராணி திருமண அழைப்பிதழில், திருமண தேதி ஆதார் எண்ணைப் போலவும், திருமணம் நடக்கும் இடம், நாள் ஆகியவை ஆதார் அட்டையில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் போலவும் அச்சிடப்பட்டுள்ளது. திருமணத்திற்காக வெளியூரிலிருந்து வருபவர்கள் எளிதாகத் திருமண மண்டபத்தை அடைய 'QR கோடு' மூலமாக வழிகாட்டும் வகையிலும் அச்சிட்டுள்ளனர்.

முடிவில் "இவண்: சாதாரண மனிதனின் அழைப்பு" என ஆதாரின் 'சாதாரண மனிதனின் அடையாளம்' என்ற வாசகத்தைப் போலவே ஒன்றை வைத்து முடித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

"புதுசு புதுசா யோசிக்கிறாங்களே..." மணமக்கள் வாழ்க வளமுடன்!