Published:Updated:

பணிச் சோர்விலிருந்து விடுபட நடனமாடிய காவல்துறை அதிகாரிகள்! - இணையத்தில் வைரலாகும் வீடியோ

காவல்துறை
காவல்துறை

அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மாவட்டக் காவல்துறையினரின் பாரம்பர்ய நடன வீடியோ வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், காவல்துறை, சுகாதாரத்துறை, நம்பகமான செய்திகளை வழங்கும் ஊடகத்துறை எனப் பல துறையினர் கடும் நெருக்கடிக்கிடையே பணியாற்றி வருகின்றனர்.

பணியில் காவல்துறையினர்
பணியில் காவல்துறையினர்

பணி முடிந்து வீட்டுக்குச் சென்றாலும், தம் குழந்தைகளைக் கூட தொட்டுக் கொஞ்ச முடியாமல், தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் சூழல் உருவாகியுள்ளது. அது பணிச்சுமையைத் தாண்டி மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது. காவல்துறையைப் பொறுத்தவகையில், அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளிய வருபவர்களை ஒழுங்குபடுத்துவது, ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என ஊரடங்கில் எந்த ஒரு பின்னடைவும் ஏ‌ற்ப‌ட்டு விடாமல் தீவிரமாகத் தங்களின் கடமையைச் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள், பணியில் சோர்வு ஏற்படாமல் இருக்க, நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 13 மணி நேரங்களைக் கடந்து தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இரண்டு நிமிடம் அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரிய பிஹு நடனமாடித் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இ‌ந்த வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நாகோன் மாவட்டக் காவல்துறை, ``இரவு 9.31 மணி, ஆனாலும் நாகோன் போலீஸ் கோவிட் போராளிகள் இன்னும் பணிபுரிந்து வருகின்றனர். அப்போது இது நடந்தது" எனக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளனர். பொதுமக்கள் பலரும் காவல்துறையைப் பாராட்டி, நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு