Published:Updated:

`குட்டி யானை எடுத்து வைத்த முதல் அடி; கொள்ளை அழகு!’ - இணையத்தில் வைரலாகும் வீடியோ

குட்டி யானை
குட்டி யானை

குட்டி யானையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயற்கையின் படைப்புகள் எல்லாமே அழகுதான். முறம்போன்ற அகன்ற காதுகளை மெல்ல அசைத்தவாறு வீறுநடை போடும் யானைகள் எப்போதும் கொள்ளை அழகு. அப்படியான ஒரு யானையின் வீடியோதான் இணையத்தில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. பிறந்த சில தினங்களேயான ஒரு குட்டி யானை முதல் அடியை எடுத்து வைக்கும் வீடியோ அது. சுஷந்த் நந்தா என்ற இந்திய அதிகாரி, தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அந்தப் பதிவில், ``1,000 மைல் பயணத்துக்காக சிறிய படியை இப்போது தொடங்குகிறது. குட்டி யானைகள் பிறந்த ஒரு மணி நேரத்தில் நிற்கத் தொடங்கிவிடும். சில மணிநேரங்களில் அவை சுற்றித்திரிய ஆரம்பித்துவிடும். அவை பிறக்கும்போது சுமார் 3 அடி உயரம் இருக்கும். யானைகளின் பிரசவம் 99 சதவிகிதம் இரவில்தான் நடக்கிறது” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை சில தினங்களுக்கு முன்பு அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அது பல ஆயிரம் லைக்ஸ்கள் மற்றும் ரீட்வீட்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்த அற்புதமான வீடியோவை பகிர்ந்ததற்காகப் பலரும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு