Published:Updated:

நெட்டிசன்களின் இதயங்களை வென்ற சிறுவன்.. மீண்டும் கவனம் ஈர்த்த `பேபி மப்ளர்மேன்'!

பேபி மப்ளர்மேன்
பேபி மப்ளர்மேன்

மீடியாக்கள் முதல் நெட்டிசன்கள் வரை, `பேபி மப்ளர்மேன்' என்ற வர்ணனையுடன் அவ்யன் தோமர் பற்றி செய்தி வெளியிட்டன. இணையத்தில் அவ்யன் தோமரின் புகைப்படங்களும் வைரலாகின.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தில் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் வெற்றியை ஆடிப்பாடி கொண்டாடினார்கள். அப்போது, ஆம் ஆத்மி கட்சித் தொண்டர் ராகுல் தோமரின் ஒன்றரை வயதுக் குழந்தை அவ்யன் தோமர் கூட்டத்தினரை வெகுவாகக் கவர்ந்தான். காரணம்... கெஜ்ரிவாலின் ஆஸ்தான தோற்றமான காதுப் பகுதியில் மப்ளர் கட்டிக்கொண்டு குட்டி மீசை வைத்து கண்ணாடி அணிந்து பெற்றோர் அவனை அழைத்து வந்திருந்தனர். மீடியாக்கள் முதல் நெட்டிசன்கள் வரை, `பேபி மப்ளர்மேன்' என்ற வர்ணனையுடன் அவ்யன் தோமர் பற்றி செய்தி வெளியிட்டன. இணையத்தில் அவ்யன் தோமரின் புகைப்படங்களும் வைரலாகின.

நெட்டிசன்களின் இதயங்களை வென்ற சிறுவன்.. மீண்டும் கவனம் ஈர்த்த `பேபி மப்ளர்மேன்'!

இதற்கிடையே, கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் பள்ளி மாணவர்கள், துப்புரவுத் தொழிலாளி, டாக்டர்கள், பஸ் டிரைவர், ஆட்டோ டிரைவர், இன்ஜினீயர், ஆர்கிடெக், பஸ் கண்டக்டர்கள், தீயணைப்புத்துறை வீரர்கள், ஆசிரியர்கள், பியூன்கள் எனச் சமுகத்தின் பல மட்ட சாமானிய மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களுடன் ஸ்பெஷல் அழைப்பாக `பேபி மப்ளர்மேன்' அவ்யனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

டெல்லி நகரமெங்கும் மினி மப்ளர் மேனுடன் கெஜ்ரிவால் இருப்பது போன்ற நோட்டீஸ்களும் ஒட்டப்பட்டன. அதன்படி இன்றைய விழாவில் கலந்துகொண்ட `பேபி மப்ளர்மேன்' என்னும் அந்தச் சிறுவன் இன்று மீண்டும் பல இதயங்களை வென்று வருகிறார்.

அன்றைக்குப் போலவே இன்றும் மப்ளர் மேன் தோற்றத்தில் வந்த அவ்யனைப் பார்த்ததும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் முக்கியப் பிரமுகர்கள் அவனுடன் கைகுலுக்கி போட்டோ எடுத்துக்கொண்டனர். ஆம் ஆத்மியின் இளம் சட்டமன்ற உறுப்பினாராகியுள்ள ராகவ் சாதாகூட அவ்யனுடன் எடுத்த போட்டோவை ட்விட்டரில் பதிவிட உடனே அது வைரலாகியது. உடனே விழாவில் பங்கேற்ற பெரும்பாலானோர் அவ்யனை போட்டோ எடுத்து பதிவிட்டனர். அதேபோன்று டெல்லியில் உள்ள பல குழந்தைகள் மப்ளர்மேன் தோற்றத்தில் விழாவில் பங்கேற்றது ஹைலைட்டாக அமைந்தது.

`தேர்தல் முடிந்துவிட்டது;இனி அனைத்துக்கட்சியினரும் என் குடும்பத்தினர்!’-டெல்லியை  கவர்ந்த கெஜ்ரிவால்
அடுத்த கட்டுரைக்கு