Published:Updated:

`விலை ரூ.8 கோடி!' - 2 வாரத் தேடல்; உரிமையாளரைத் தவிக்கவிட்ட அரியவகை நாய்

Alaskan Malamute
Alaskan Malamute

தன் பிறந்தநாளை, தான் வளர்த்த அன்பான நாய்களுடன் கொண்டாட விரும்பிய சேத்தன் சாம்சங் குறித்து குழந்தைகளிடம் கேட்டுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான சேத்தன், இரண்டு வருடங்களுக்கு முன்பு சீனாவிலிருந்து Alaskan Malamute என்ற அரிய இனத்தைச் சார்ந்த பெண் நாயை ,ரூபாய் 8 கோடிக்கு வாங்கியுள்ளார். இதற்கு சாம்சங் எனப் பெயரிட்டு மிகவும் செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்த வகை நாய்களுக்கு உள்ளூரில் நல்ல மவுசு இருக்கிறது. ஒரு குட்டி, ரூபாய் 2 லட்சம் வரை விலை போகிறது. சேத்தன் வீட்டுக்கு அருகே பள்ளி ஒன்று உள்ளது. அங்கு பயிலும் ஒரு சிறுவனும் அவரது சகோதரியும் மிகவும் பாசத்துடன் தினமும் சேத்தன் வீட்டிற்கு வந்து அந்த நாயுடன் பழகி வந்துள்ளனர்.

காணாமல் போன் சாம்சங்
காணாமல் போன் சாம்சங்

குழந்தைகள், சாம்சங்கிடம் மிகுந்த அன்பு காட்டியுள்ளனர். இதனால், சாம்சங்கை குழந்தைகளே வளர்க்கும்படியும் குட்டி போட்டால் ஒரு குட்டியை அவர்கள் வைத்துக்கொண்டு மற்றவற்றை சேத்தனிடம் தந்து விடும்படியும் சொல்லி சாம்சங்கை அக்குழந்தைகளின் குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளார். சாம்சங்கும் குழந்தைகளுடன் பெங்களூரில் உள்ள ஹனுமத் நகரில் வசித்து வந்தது. தன் பிறந்தநாளை, தான் வளர்த்த அன்பான நாய்களுடன் கொண்டாட விரும்பிய சேத்தன் நவம்பர் 26-ம் தேதி, சாம்சங்கை தன் வீட்டில் கொண்டு வந்து விடும்படி கேட்டுள்ளார். ஆனால் சாம்சங்கை வளர்ப்பவர்கள் தங்கள் உறவினர் வீட்டில் சாம்சங் இருப்பதாகக் கூறி விட்டனர்.

டிசம்பர் 21-ஆம் தேதி கல்லுரி ஒன்றுக்குச் சிறப்பு அழைப்பாளராக சேத்தனை அழைத்துள்ளனர். தான் தலைமை ஏற்கும் விழாவிற்குத் தன்னிடம் உள்ள அரிய இன நாய்களை அழைத்துச் செல்ல விரும்பினார் அவர். அப்போதும் நாயை ஏதேதோ காரணம் சொல்லி அனுப்பவில்லை. சுதாரித்த சேத்தன் குழந்தைகளின் தந்தையிடம் உண்மை நிலையைக் கூறுமாறு கேட்டார். சேத்தனின் மிரட்டலுக்குப் பின் அக்குடும்பத்தினர், சாம்சங் காணாமல்போனதாகக் கூறியுள்ளனர். ரூ.8 கோடி மதிப்புள்ள அரிய இன நாயைத் தொலைத்துவிட்டதில் குழந்தைகள் மிரண்டுபோய் இருந்துள்ளனர். வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த சாம்சங்கை கழுத்துச் செயினை வெட்டிவிட்டு கடத்தி உள்ளனர் என்பதைத் தெரிந்துகொண்ட சேத்தன், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கக் கூறினார்.

Representation image
Representation image

இதையடுத்து நாயைப் பற்றிய விவரம், புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு, சாம்சங்கைக் கண்டுபிடித்துத் தருபவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த நாய் குறித்து தெரிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், அதைக் கடத்தி இருப்பாரோ என்ற சந்தேகம் சேத்தன் மற்றும் அந்தக் குடும்பத்தினருக்கு எழுந்துள்ளது. டிசம்பர் 13ம் தேதி கொடுக்கப்பட்டிருந்த புகாரின் பேரில் போலீஸார் தேடுதல் பணியை முடுக்கிவிட்டிருந்தனர்.

இந்தநிலையில், சாம்சங், தற்போது உரிமையாளரான சேத்தனுக்கு , பலகட்ட தேடுதலுக்குப் பின் கிடைத்துவிட்டது. மிகவும் நெருங்கியவர்கள்தான் நாயைக் கடத்தி இருக்க வேண்டும் என்று சேத்தன் தரப்பில் கருதுகின்றனர். இரண்டு வார தேடுதலுக்குப் பின் ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட சாம்சங், உரிமையாளரிடம் திரும்பியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு