Published:Updated:

பெங்களூர்: காவல்துறை அதிகாரிக்கே அபராதம் விதித்த காவலர் - ஏன் தெரியுமா?!

காவல்துறை அதிகாரிக்கே அபராதம் விதித்த காவலர் ( ட்விட்டர் )

பெங்களூரில் முறையான ஹெல்மெட் அணியவில்லை என்ற காரணத்தால் காவல்துறை அதிகாரிக்கே காவலர் ஒருவர் அபராதம் விதித்திருக்கிறார்.

பெங்களூர்: காவல்துறை அதிகாரிக்கே அபராதம் விதித்த காவலர் - ஏன் தெரியுமா?!

பெங்களூரில் முறையான ஹெல்மெட் அணியவில்லை என்ற காரணத்தால் காவல்துறை அதிகாரிக்கே காவலர் ஒருவர் அபராதம் விதித்திருக்கிறார்.

Published:Updated:
காவல்துறை அதிகாரிக்கே அபராதம் விதித்த காவலர் ( ட்விட்டர் )

போக்குவரத்து விதியின்படி இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அந்த வகையில், சாலைப் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றவில்லையென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், முறையான ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி ஒரு காவலருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிற சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

பெங்களூர் ஆர்.டி.நகரில் காவலர் ஒருவர், இருசக்கர வாகனத்துக்கு அணியவேண்டிய ஹெல்மெட் அணியாமல், வேறு வகையான ஹெல்மெட் அணிந்துவந்திருக்கிறார். அப்போது வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர் இதை கவனித்து அந்தக் காவலரைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.

மேலும், அவர் முறையான ஹெல்மெட் அணியவில்லை என அந்தக் காவலருக்கு அபராதம் விதித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, இது தொடர்பான புகைப்படத்தை ஆர்.டி நகர் போக்குவரத்து காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,"குட் ஈவினிங். முறையான ஹெல்மெட் அணியாத காவலர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது," எனப் பதிவிட்டிருக்கிறது. இந்தப் படம் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. சிலர் காவல்துறையைப் பாராட்டியும், சிலர் ``இது விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட படம்'' என விமர்சித்தும்வருகின்றனர்.