Published:Updated:

மணமக்கள் அழைப்புக்காக ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ... வாடகை எவ்வளவு தெரியுமா?

ஹெலிகாப்டர் வடிவில் மாற்றப்பட்ட நானோ கார்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர், திருமண விழாவுக்கு மணமக்களைப் பிரமாண்டமான முறையில் அழைத்துச் செல்வதற்காக நானோ கார் ஒன்றை ஹெலிகாப்டர் வடிவில் மாற்றியுள்ளார்.

மணமக்கள் அழைப்புக்காக ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ... வாடகை எவ்வளவு தெரியுமா?

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர், திருமண விழாவுக்கு மணமக்களைப் பிரமாண்டமான முறையில் அழைத்துச் செல்வதற்காக நானோ கார் ஒன்றை ஹெலிகாப்டர் வடிவில் மாற்றியுள்ளார்.

Published:Updated:
ஹெலிகாப்டர் வடிவில் மாற்றப்பட்ட நானோ கார்

திருமண விழாக்களில் ஏதாவது புதுமையைப் புகுத்தி வைரலாவதுதான் இப்போதைய ட்ரெண்ட். அண்மையில் ஒரு திருமண விழாவில் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து, மணமக்களை அழைத்து வந்த சம்பவம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அப்படி ஓர் ஆசையைப் பூர்த்தி செய்ய, செலவு குறைவான வழி ஒன்றையும் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பீகார் மாநிலத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் விலை மலிவாக ஹெலிகாப்டரில் மணமக்களைப் பறக்க வைக்கலாம். ஆனால், இது ஒரு 'Man Made Car' ஹெலிகாப்டர்.

டாடா நானோ
டாடா நானோ

இந்த ஹெலிகாப்டரைத் தயாரித்திருக்கிறார் பீகார் மாநிலம் பகாஹா நகரில் வசிக்கும் ஒரு மெக்கானிக். இவர் ஹெலிகாப்டர் ஆக்கியிருப்பது, ஒரு டாடா நானோ கார்! ஏற்கெனவே இந்தியாவின் விலை குறைந்த காராக அறிமுகமான டாடா நானோ பல குடும்பங்களின் முதல் காராக ஆகிப்போனது. பின்னர், அதன் விற்பனை குறைவானதால், அதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது இந்தியாவின் விலை மலிவான, ஹெலிகாப்டர் காராகவும் நானோ மாறியிருப்பது செம ட்ரெண்டிங்காக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தயாரித்திருப்பவர் குட்டு ஷர்மா என்ற மெக்கானிக். ஹெலிகாப்டர் என்றவுடன் ‘பட பட பட’ என்று 15,000 அடிக்கு மேல் பறக்கும் என்று கற்பனை செய்து விடாதீர்கள். இந்த ஹெலிகாப்டர் வடிவ நானோ, சாதாரண கார்போல தரையில்தான் செல்லும்; பறக்காது. திருமண விழாக்களில் பலர் தங்கள் புதிய மணமக்களை ஹெலிகாப்டரில் பிரமாண்டமான முறையில் அழைத்து வர விரும்புகின்றனர். ஆனால் அதற்கு நிறைய செலவழிக்க வேண்டி இருக்கும், சாமானிய மக்களால் அதைச் செய்ய முடியாது என்பதால் இவ்வாறு ஹெலிகாப்டர் வடிவ காரை தான் உருவாக்கியதாகக் கூறுகிறார் குட்டு ஷர்மா.

ஹெலிகாப்டர் வடிவில் மாற்றப்பட்ட நானோ கார்
ஹெலிகாப்டர் வடிவில் மாற்றப்பட்ட நானோ கார்

இந்த நானோ காரை ஹெலிகாப்டர் வடிவில் வடிவமைக்க உலோகப் பேனல்களைப் பயன்படுத்தியுள்ளார் குட்டு ஷர்மா. இதற்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் வரை செலவானதாக கூறுகிறார் ஷர்மா. மேலும் இந்தக் காரை பலர் தங்கள் திருமணத்திற்காக முன்பதிவு செய்துள்ளதாகவும் ஒரு திருமண விழாவிற்கு 15,000 ரூபாய் வரை வாடகை வாங்குவதாகவும் கூறுகிறார். இது பற்றிக் கூறும் ஷர்மா, "டிஜிட்டல் இந்தியா காலத்தில், இந்தக் கண்டுபிடிப்பு தன்னிறைவு பெற்ற இந்தியாவுக்கு ஓர் உதாரணமாக இருக்கிறது. இதுபோன்ற ஹெலிகாப்டரைத் தயாரிக்க ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும். இன்னும் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட்டால் இதைப் பல மேம்பட்ட வசதிகளைக் கொண்ட ஹைடெக் ஹெலிகாப்டராக மாற்றிவிடலாம்" என்கிறார்.

இதே போல் 2019-ம் ஆண்டில் மிதிலேஷ் பிரசாத் என்பவர் ஹெலிகாப்டர்களை வடிவமைக்க வேண்டும் என்ற தனது சிறுவயது கனவை நிறைவேற்ற, தனது நானோவை ஹெலிகாப்டராக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism