Published:Updated:

பதுங்கிப் பாய்ந்த சிறுத்தை; நூலிழையில் தப்பிய இளைஞர்கள் - வைரல் வீடியோ!

சிறுத்தையின் தாக்குதலிலிருந்து பைக்கில் சென்ற இளைஞர்கள் இருவர் நூலிழையில் தப்பிய வீடியோ, இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிறுத்தை
சிறுத்தை

''காடுகளை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்'' என்ற கேப்ஷனுடன் ஐஎஃப்எஸ் அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ, வனப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரம் அந்தக் காடு அமைதியாக இருக்கிறது. சாலையில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனத்தில் இருப்பவர்கள், அந்த அமைதிக்குப் பின்னால் இருக்கும் ஆபத்தை நன்கு உணர்ந்திருந்தனர்.

சிறுத்தை
சிறுத்தை

சாலையின் ஓரத்தில் இருந்த புதரில், சிறுத்தை ஒன்று பதுங்கியிருந்ததைப் பார்த்துவிட்டனர். அந்தச் சிறுத்தை சாலையைக் கடக்கட்டும் எனப் பொறுமையாகக் காத்திருந்தனர். சிறுத்தையின் மீதே இவர்களது கவனம் இருந்தது. சிறுத்தை புதருக்குள் தனது உடலை மறைக்கத்தொடங்கியது. நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தைக் கடந்து, ஒரு இருசக்கர வாகனம் விரைந்தது. பதுங்கியிருந்த சிறுத்தை அந்த இளைஞர்களைக் குறிவைத்துப் பாய்ந்தது. நூலிழையில் இளைஞர்கள் இருவரும் தப்பினர். சிறுத்தையைக் கண்டதும் அவர்களின் வாகனம் வேகமெடுத்தது. இந்த வீடியோவைத்தான் நந்தா பதிவிட்டுள்ளார்.

`இப்படியொரு ஆட்டத்தைப் பார்த்ததில்லை!'- காரின் நடுவில் அமர்ந்த யானை; அச்சப்பட்ட பயணிகள் #Viralvideo

அவரது பதிவில், “ சிறுத்தை எவ்வாறு தவறவிட்டது. அந்த வனத்தின் உண்மையான உரிமையாளரான சிறுத்தைக்கு சரியான வழியைக் கொடுக்க அனைவரும் காத்திருந்தனர். ஒரு இரு சக்கர வாகன ஓட்டுநர், தன் வழியில் பயணிக்க விரும்பினார். அதுவே, அவரது கடைசி சவாரியாக இருந்திருக்கும். காடுகளை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். கேரளாவில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தை சிறுத்தை துரத்தும் வீடியோ இணையத்தில் வைரலானது.