Published:Updated:

பணி நேரத்தில் உணவருந்தத் தடை... தகவல் சொன்னால் சன்மானம்! - இணையத்தில் வைரலாகும் அறிவிப்பு

இணையத்தில் வைரலாகும் அறிவிப்பு ( ட்விட்டர் )

தனியார் நிறுவனம் ஒன்றின் எச்சரிக்கை அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.

பணி நேரத்தில் உணவருந்தத் தடை... தகவல் சொன்னால் சன்மானம்! - இணையத்தில் வைரலாகும் அறிவிப்பு

தனியார் நிறுவனம் ஒன்றின் எச்சரிக்கை அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.

Published:Updated:
இணையத்தில் வைரலாகும் அறிவிப்பு ( ட்விட்டர் )

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சமூக வலைதளத்தில், தான் பணிபுரியும் நிறுவனம் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை அறிக்கையைப் பகிர்ந்திருக்கிறார். அதில், ``அலுவலகத்தில் பணிபுரியும் நேரத்தில் எந்த ஊழியரும் சாப்பிடக் கூடாது. வேலை நேரத்தில் சாப்பிடுவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. சக ஊழியர்கள் சாப்பிடுவதை நிறுவனத்துக்குத் தெரிவிப்பவருக்கு 20 டாலர் சன்மானமாக வழங்கப்படும். 

நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை
நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை
ட்விட்டர்

மேலும், வேலை நேரத்தில் சாப்பிடும் நபருக்கு மூன்று எச்சரிக்கைகள் வரை வழங்கப்படும். 4-வது முறையும் வேலை நேரத்தில் சாப்பிட்டதாகப் புகாரளிக்கப்பட்டால், அவர் பணியிலிருந்து நீக்கப்படுவார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்த அந்த ஊழியர், அந்தக் கடிதம் உருவாக்கும் மோசமான சூழலைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறார். அவர் இணையத்தில் பகிர்ந்த இந்த அறிவிப்பு வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது. இணையவாசிகள் பலரும் இத்தகைய அறிவிப்புக்கு எதிராகத் தங்கள் கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணம்
பணம்

மேலும், ``இந்தக் கடிதம் சக ஊழியர்களிடம் உள்ள நட்பைக் கெடுக்கும். எப்போதும் எச்சரிக்கை உணர்வுடனும், எல்லோரையும் சந்தேகப் பார்வையுடனும் அணுக வழிவகை செய்யும்... இதன் மூலம் ஒவ்வோர் ஊழியரும், சக ஊழியர் குறித்து புகார் தெரிவித்து 20 டாலர் பெற்றுக்கொள்ளலாம் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட வாய்ப்புகள் அதிகம்" என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism