Published:Updated:

Viral: ரிப்பன் வெட்டி திறந்துவைத்த மறுநொடி... இடிந்து விழுந்த பாலம் - வைரல் வீடியோ!

இடிந்து விழுந்த பாலம்

காங்கோவில் திறப்புவிழாவின்போதே பாலம் இடிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

Viral: ரிப்பன் வெட்டி திறந்துவைத்த மறுநொடி... இடிந்து விழுந்த பாலம் - வைரல் வீடியோ!

காங்கோவில் திறப்புவிழாவின்போதே பாலம் இடிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

Published:Updated:
இடிந்து விழுந்த பாலம்

ஆப்பிரிக்க நாட்டிலிருந்து குடியரசு நாடாகப் பிரிந்த காங்கோவில் திறப்புவிழாவின்போதே பாலம் இடிந்து விழுந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

இது தொடர்பாக அந்த நாட்டுச் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் ,``மழைக்காலத்தில் உள்ளூர் மக்கள் ஆற்றைக் கடக்க உதவும் வகையில் சிறிய பாலம் கட்டப்பட்டது. பாலத்துக்கு முன்பு இருந்த தற்காலிகக் கட்டமைப்பு அடிக்கடி உடைந்துவருவதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், பாலத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வந்திருந்த அதிகாரிகள், பாலத்தில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை வெட்டியபோது பாலம் இடிந்து விழுந்திருக்கிறது.

அதிஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. ஆனால் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சில பொதுமக்களுக்குக் காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் பாலத்தை அமைக்க ஒரு மில்லியன் டாலருக்கு மேல் செலவானது எனவும் கூறப்படுகிறது. பாலம் இடிந்து விழும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.