Published:Updated:

வைரலாகும் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தை... நெட்டிசன்களுக்கு சவால்விடும் டிரெண்டிங் போட்டோ!

இந்த போட்டோவை சாதாரணமாகப் பார்க்கும்போது, இதில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியாது.

Viral Photo
Viral Photo

ஒவ்வொரு விலங்கும் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் திறனைப் பெற்றிருக்கிறது. camouflage எனப்படும் இந்த உருவ மறைப்பு வித்தைகளை விலங்குகள் சில இடங்களில் சரியாகப் பயன்படுத்துகின்றன. எதிரி தாக்க வரும்போது தப்பிக்கவும், மறைந்திருந்து இரையை வேட்டையாடவும் அது உதவுகிறது.

சில உயிரினங்கள், இடத்துக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும். இன்னும் சில விலங்குகள், நிறம் மாறும் தன்மையைக் கொண்டிருக்காவிட்டாலும்கூட, ஏதேனும் ஒன்றில் அவை மறைந்திருந்தால் கண்டுபிடிக்க முடியாது. அப்படி, ஒரு சிறுத்தை மறைந்திருக்கும் புகைப்படம்தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

பெல்லா லேக் (Bella Lack) என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போட்டோவை அப்லோட் செய்திருக்கிறார். செப்டம்பர் 27-ம் தேதி, அந்த ட்வீட்டில் ‘ யாரோ இந்த போட்டோவை அனுப்பி, இதில் இருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம் என்றார்கள். நானும், அவர் காமெடி செய்கிறார் என்றே நினைத்திருந்தேன். இதில் மறைந்திருந்த சிறுத்தையைப் பார்க்கும் வரை. உங்களால் அதைக் கண்டுபிடிக்க முடிகிறதா’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, அந்த போட்டோ வைரலானது. பலர் அந்த போட்டோவை ரீ ட்வீட் செய்வது மட்டுமின்றி, அவர் கேட்ட கேள்விக்கான பதிலையும் தெரிவித்துவருகிறார்கள்.

இதுபோன்ற போட்டோக்கள் பலரைக் குழப்புவதும், இணையத்தைக் கலக்குவதும் இதற்கு முன்பு பல முறை நடந்திருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட, பனிச்சிறுத்தை ஒன்று மறைந்திருந்த போட்டோ ஒன்று வைரலனாது. இந்த போட்டோவை சாதாரணமாகப் பார்க்கும் எவராலும் நிச்சயமாக இதில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டறிவது கொஞ்சம் சிரமம்தான்.

Leopard Hidden in Viral Photo
Leopard Hidden in Viral Photo

பெல்லா லேக் பகிர்ந்திருக்கும் போட்டோவை நன்கு கூர்ந்து கவனித்தால்தான், சிறுத்தை ஒன்று நிழலான பகுதியில் இருப்பது தெரியும்.