Published:Updated:

காரில் உறவுகொண்டபோது பாலியல் நோய் பாதிப்பு; 40 கோடி இழப்பீடு பெற்ற பெண்... நடந்தது என்ன?

கார் ( Representational Image )

அந்தப் பெண் கடந்த மற்றும் எதிர்கால மருத்துவ செலவுகள், மன, உடல் வலி மற்றும் நான் அடைந்த துன்பங்கள் என அனைத்துக்கும் சேர்த்து இழப்பீடு கோரினார்.

காரில் உறவுகொண்டபோது பாலியல் நோய் பாதிப்பு; 40 கோடி இழப்பீடு பெற்ற பெண்... நடந்தது என்ன?

அந்தப் பெண் கடந்த மற்றும் எதிர்கால மருத்துவ செலவுகள், மன, உடல் வலி மற்றும் நான் அடைந்த துன்பங்கள் என அனைத்துக்கும் சேர்த்து இழப்பீடு கோரினார்.

Published:Updated:
கார் ( Representational Image )

காரில் தன் துணைவருடன் தாம்பத்திய உறவு கொண்டபோது தன் துணையிடமிருந்து கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு காரணமாகும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸால் (HPV) பாதிக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்த அமெரிக்கப் பெண்ணுக்கு வாகனக் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து 5.2 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 40.56 கோடி ரூபாய்.

கார் காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீடு
கார் காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீடு

அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தைச் சேர்ந்த அந்தப் பெண் ஹியூமன் பாப்பிலோமா வைரஸால் பாதிக்கப்பட்ட அவரின் துணையுடன் பாலியல் தொடர்பில் இருந்ததன் மூலம் வைரஸ் பரவியதாகவும், அவரின் துணைவர் எடுத்திருந்த வாகன காப்பீட்டின் அடிப்படையில் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட "சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு" காப்பீட்டு நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கியுள்ளதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் துணைவருடன், 2017- ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அவரின் உடல்நிலை பற்றி அறிந்திருந்தும் வாகனத்தில் பாதுகாப்பற்ற பாலியல் செயல்களில் ஈடுபட்டபோது ஹியுமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக முதல்முறையாக காப்பீட்டு தொகை கோரியபோது அந்தப் பெண் தெரிவித்திருந்தார்.

Couple
Couple
Photo by Womanizer Toys on Unsplash

அப்பெண்ணின் துணைவரின் தொண்டைப் புற்றுநோய்க் கட்டியில், ஹியுமன் பாப்பிலோமா வைரஸ் பாசிட்டிவ்வாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் கடந்த மற்றும் எதிர்கால மருத்துவ செலவுகள், மன, உடல் வலி மற்றும் தான் அடைந்த துன்பங்கள் என அனைத்துக்கும் சேர்த்து இழப்பீடு கோரினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தப் பெண் 9.9 மில்லியன் டாலரை இழப்பீட்டுத் தொகையாகக் கோரியிருந்தார். நீதிமன்றம் அவருக்கு 5.2 மில்லியன் டாலர் தொகையை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. குறிப்பிட்ட கார் காப்பீட்டு நிறுவனம், பாதிக்கப்பட்ட பெண் கோரியிருந்த காப்பீட்டுத் தொகையை முதலில் நிராகரித்தது. அந்தப் பெண் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இழப்பீட்டுத் தொகையைப் பெற்றார்.

Court -Representational Image
Court -Representational Image

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்பது அமெரிக்காவில் மிக அதிகமாகப் பரவும் பாலியல் நோய்த்தொற்றுகளில் ஒன்றாகும், அதிக ஆபத்துள்ள இதன் திரிபுகள் புற்றுநோயை உண்டாக்கும். அதற்கு எதிராக தடுப்பூசி உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு பற்றிய விவரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. "கார் காப்பீட்டுக்கு ஏன் இவ்வளவு செலவாகிறது என்பதில் இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான சேத உரிமை கோரல்களுக்குப் பெரும்பங்குண்டு" என்று எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism