Published:Updated:

`அப்பா இல்லாமல் எப்படி?'- வைரல் புகைப்படமும்... அமெரிக்க தம்பதியும்...

டெக்சாஸை சேர்ந்த இளம்தம்பதி மருத்துவமனையில் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆலியா தாம்சன், மைக்கேல்
ஆலியா தாம்சன், மைக்கேல்

திருமணங்கள் இப்போது மிகவும் ஆடம்பரமாகிவிட்டன. பிரபலங்களைப்போல மிகவும் ஆடம்பரமான வித்தியாசமான திருமணங்கள் செய்துகொள்ள இன்றைய இளம்தலைமுறையினர் விரும்புகின்றனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் நடக்கும் திருமணங்கள் எல்லாம் வேறு ரகம். சமீபத்தில்கூட பாழடைந்த கட்டடங்கள், தெருக்கள் போன்றவற்றில் நடந்த திருமணம் தொடர்பாகப் புகைப்படங்கள் இணையத்தில் வட்டமடித்தது. கடந்த சில நாள்களாக டெக்சாஸ் மருத்துவமனையில் மோதிரம் மாற்றிக்கொண்ட இளம்தம்பதிகள் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. யார் இந்தத் தம்பதி மருத்துவமனையில் திருமணம் செய்துகொள்ள என்ன காரணம் எனத் தெரிந்துகொள்ள முயன்றோம். அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனை இந்த இளம்தம்பதியின் புகைப்படங்களை வெளியிட்டு அதற்கான காரணத்தையும் பதிவு செய்திருந்தனர்.

ஆலியா தாம்சன், மைக்கேல்
ஆலியா தாம்சன், மைக்கேல்

டெக்சாஸை சேர்ந்த ஆலியா தாம்சன், மைக்கேல்தான் அந்த இளம்தம்பதி என்பது தெரியவந்தது. மைக்கேல் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஆலியா தாம்சன் என்ற பெண்ணுக்கு இந்தாண்டு தொடக்கத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மார்ச் மாதம் திருமணம் நடப்பதாக இருந்தது. மைக்கேல் ராணுவத்தில் பணிபுரிந்து வந்ததால் அவருக்கு விடுப்பு கிடைப்பதில் தாமதமானது முதல் முறை திருமணம் தள்ளிப்போனது. இரண்டாவது முறையாக திருமணம் தேதி குறிக்கப்பட்டது. இந்த முறை நெருங்கிய உறவினர்கள் இருவரின் மரணத்தால் திருமணம் தள்ளிப்போனது. இதையடுத்து மூன்றாவது முறையாகத் தேதி குறிக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக மைக்கேலின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

'அக்காவுக்கு வந்த ப்ரோபசல்... வித்தியாசமாக படம் எடுத்த தங்கை!' - வைரலான அமெரிக்க காதல் எபிசோடு

அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். திருமணம் தள்ளிப்போவது மைக்கல், ஆலியாவுக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்தது. தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆடம்பரமாகத் திருமணம் செய்துகொள்ளவும் இவர்கள் இருவருக்கும் விருப்பமில்லை. இந்நிலையில் ஆலியா மைக்கேலைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். மருத்துவமனையில் திருமணம் செய்துகொள்ளலாம் எனத் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். திருமணத்துக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் கைவிடப்பட்டது. திருமணத்தை எளிமையாக மருத்துவமனையில் நடத்திவிட முடிவு செய்தனர்.

ஆலியா தாம்சன், மைக்கேல்
ஆலியா தாம்சன், மைக்கேல்

உடனடியாக `பிளான் பி’யைத் தயார் செய்தனர். மருத்துவமனையில் திருமணம் அதன்பின் தேவாலயத்தில் வரவேற்பு எனத் திட்டமிட்டனர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு நண்பர்கள், உறவினர்கள் என 200 பேருக்கு அழைப்பு விடுத்தனர். விறுவிறுவென திருமண ஏற்பாடுகளில் கவனம் செலுத்தினர். மருத்துவர்கள், செவிலியர்கள், உறவினர்கள் என 15 நபர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. மணமக்கள் இருவரும் மருத்துவமனை அறிவுரைப்படி நீள நிற உடை அணிந்திருந்தனர். விருந்தினர்களால் நோயாளிகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாதவாறு நடந்துகொண்டனர். மருத்துவமனையில் நடந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

`200 கேட்டீர்கள், அடித்துவிட்டேன்... வேற என்ன?!' - மயங்க் கேள்விக்கு சைகையால் பதில் சொன்ன கோலி

இதுகுறித்து பேசிய ஆலியா தாம்சன், “நான் மைக்கலை கூப்பிட்டேன். உன் தந்தைக்கு அறுவைசிகிச்சை நடக்கவுள்ளது. அவரைத் தவிர்த்துவிட்டு நாம் திருமணம் செய்துகொள்ள முடியாது. நாம் ஏதாவது செய்ய வேண்டும். திருமணத்துக்கு அவரை அழைத்து வருவது என்பது சிறந்த யோசனையாக படவில்லை. நாம் மருத்துவமனையில் திருமணம் செய்துகொண்டால் என்ன என்று எண்ணினோம். மைக்கல் உடனடியாக சர்ச்சுக்கு சென்று பாதிரியாரிடம் இதுகுறித்து பேசினார். அவர்களும் எங்கள் யோசனைக்கு ஆதரவு அளித்தனர்” என்றார்.

ஆலியா தாம்சன், மைக்கேல் குடும்பத்தினர்
ஆலியா தாம்சன், மைக்கேல் குடும்பத்தினர்

மைக்கேல் கூறிகையில், என் தந்தை படுக்கையில் இருந்தார். ஆனால், எங்கள் திருமணம் அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆலியாவை அவர் தன் மகளாகவே ஏற்றுக்கொண்டார். இது எங்கள் திருமணத்தை வலுப்படுத்தியுள்ளது. திருமணத்தின்போது அவரது புன்னகையை மட்டுமே பார்க்க முடிந்தது” என்கிறார் மகிழ்ச்சியுடன்.