Published:Updated:

சாலையில் தேங்கிய மழைநீரில் நாயை வேட்டையாட முயன்ற முதலை! #ViralVideo

ப.கா.ரேவந்த் ஆண்டனி

முதலை ஒன்று தனக்கே உரிய பாணியில் சைலன்டாக வந்து ஒரு நாயை நீரிலிருந்து கடிக்கப் பாய்கிறது.

முதலை
முதலை

குஜராத் பெருமழைக்குப் பிறகு வதோதராவும் அதைச் சுற்றியுள்ள நகரங்களின் தெருக்கள் நீரில் மூழ்கின. அப்பகுதிகளில் உலா வரும் முதலைகளின் வீடியோ இன்டர்நெட்டில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வதோதராவில் புதன்கிழமை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகரமெங்கும் வெள்ளமாக காணப்படுகிறது. வெள்ளப்பெருக்கால் ஆற்றிலிருந்து அடித்துவரப்பட்ட முதலைகள் தெருக்களில் சுற்றித் திரிவது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முதலை
முதலை

#VadodaraRains #Vadodara என்ற ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் வதோதாரா மழை குறித்த செய்திகளை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று `பகீர்' ரகம். இணையத்தில் வைரலான அந்த வீடியோவில், ``சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் இரண்டு தெரு நாய்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றன. அப்போது, அதில் ஒரு நாயின் பின்புறமாக முதலை ஒன்று, தனக்கே உரிய பாணியில் சைலன்டாக பின்தொடருகிறது. சில விநாடிகள் காத்திருக்கும் அந்த முதலை, நீரிலிருந்து பாய்ந்து ஒரு நாயைக் கடிக்கப் பாய்கிறது. அதற்குள் சுதாரித்துக்கொண்ட அந்த நாய் லாவகமாக முதலையிடமிருந்து தப்பித்துக்கொண்டது. இதைக்கண்டு சுற்றியிருக்கும் மக்கள், பெரும் கூச்சல் எழுப்பி ஆரவாரம் செய்கின்றனர்".

அதேபோல் ஷைலேந்திர மோகன் என்பவர் ட்விட்டரில் பதிவேற்றியுள்ள வீடியோவில், சாலையில் சாவகாசமாக முதலை ஒன்று ஊர்ந்து வரும் வீடியோவும் சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சாலையில் தேங்கிய மழைநீரில் நாயை வேட்டையாட முயன்ற முதலை! #ViralVideo

இந்த இரண்டு வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. குஜராத்தில் மேலும் சில நாள்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியிருக்கிறது. ரயில் நிலையங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால், அம்மாநிலத்தில் 22-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், விமானப் போக்குவரத்தும் சில இடங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறது.