Published:Updated:

`இதுதான் கடலா... தினமும் இங்க வர முடியாதா?!' -கடற்கரையில் நெகிழ்ந்த மாற்றுத்திறனாளிகள்

disability children's
News
disability children's

கடற்கரை மணலில் கால் வைப்பதே தெரபி போன்றது. தவிர, கடல் காற்று, அலையின் ஓசை எனக் கடலால் கிடைக்கும் மகிழ்ச்சியை வருஷத்துல ஒருநாள்தான் எங்களால் அனுபவிக்க முடியுது.

ஒவ்வோர் ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் தினத்தில், சென்னை மெரினா கடலில் மாற்றுத்திறனாளிகள் கால் வைத்து மகிழவும் கடல் அழகை ரசிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் வித்யாசாகர் அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்வு நேற்று முன்தினம் தொடங்கி, ஒருவாரத்துக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுக்குப் பின்னிருக்கும் சவால்கள் குறித்துப் பேசுகிறார், வித்யாசாகர் அறக்கட்டளையின் உறுப்பினர் ஸ்மித்தா.

disability children's
disability children's

``எங்க அறக்கட்டளையில படிக்கிற மாற்றுத்திறன் மாணவர்கள் கடலின் அழகைப் பார்த்து ரசிக்கணும்னு அடிக்கடி கேட்பாங்க. அதற்காக அப்போதைய மாநகராட்சி இணை ஆணையர்கிட்ட அனுமதி கேட்டோம். அவர் ஏற்பாட்டில், நாலு வருஷத்துக்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் தினத்துல எங்க மாணவர்கள் மற்றும் பல்வேறு மாற்றுத்திறனாளிகளையும் கடற்கரைக்குக் கூட்டிட்டுப்போனோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
disability children's
disability children's

அடுத்த வருஷமும் ஒருநாள்தான் அனுமதி கொடுத்தாங்க. ஆனா, ஒரு வாரத்துக்கு அனுமதி கொடுக்கச் சொல்லிக் கேட்டோம். கடந்த ஆண்டு ரெண்டு நாள் அனுமதி கொடுத்த நிலையில், இந்த வருஷம்தான் ஒரு வாரத்துக்கு அனுமதி கொடுத்திருக்காங்க.

இந்த நிகழ்வுக்காக வருஷத்துல ஒருமுறை மட்டும் மாநகராட்சி சார்பில் கடற்கரையில் பிரத்யேகமான பாதையை அமைச்சுக்கொடுக்கிறாங்க. ஆனா, மற்றவர்களைப்போல ஆண்டு முழுக்க எப்போது வேண்டுமானாலும் மாற்றுத்திறனாளிகளும் கடற்கரைப் போகணும். அதற்காக, மாற்றுத்திறனாளிகள் வீல்சேர்ல செல்ல நிரந்தரமான பாதையை உருவாக்கணும்னு தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம்.

smitha with corporation officers
smitha with corporation officers

`இது சிரமமான காரியம்! கடற்கரையை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ், இந்தப் பாதையையும் இணைத்து, புதிய பாதையை உருவாக்கித் தர்றோம்'னு மாநகராட்சி நிர்வாகத்தினர் சொன்னாங்க. ஆனா, கடற்கரைப் பகுதி மத்திய அரசின் சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்ட பகுதியா இருக்கிறதால, அந்தத் துறையில இருந்து இன்னும் அனுமதி கிடைக்கலை.

disability children's
disability children's

எனவேதான், இந்த வருஷமும் குயின்மேரிஸ் கல்லூரிக்கு எதிர்புறத்திலுள்ள கடற்கரைப் பகுதியில தற்காலிக நடைபாதை அமைச்சிருக்கோம். அடுத்த வருஷத்துக்குள் எங்களுக்கு நிரந்தர நடைபாதை கிடைச்சுடும்னு நம்புறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த இரண்டு தினத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், கடற்கரைக்கு வந்தாங்க. மாற்றுத்திறனாளிகள் கடலைப் பார்க்கிறதே அபூர்வம்தான்.

disability children's
disability children's
disability children's
disability children's

கடற்கரை மணலில் கால் வைக்கிறதே தெரப்பி போன்றது. தவிர, கடல் காற்று, அலையின் ஓசைனு கடலால் கிடைக்கும் மகிழ்ச்சியை வருஷத்துல ஒருநாள்தான் எங்களால் அனுபவிக்க முடியுது. இந்தத் தருணத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சி கிடைக்குது.

`இதுதான் கடலா? நாங்க பார்த்ததேயில்லை. தினமும் இங்க வர முடியாதா?'னு பல மாற்றுத்திறனாளிகள் ஏக்கத்துடன் கேட்கிறாங்க. மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு உரிய உதவிகளை செய்யணும்" என்று கோரிக்கை வைக்கிறார், ஸ்மித்தா.