Published:Updated:

`காந்த கண்ணழகி..!'- ட்யூனுக்கு ஏற்ப கியர் மாற்றிய கல்லூரி மாணவிகள்; டிரைவருக்கு நேர்ந்த சோகம் #Video

கல்லூரி மாணவிகளை கியர்போட அனுமதித்த ஓட்டுநர் சிரித்தபடியே ஸ்டியரிங்கைச் சுற்றி வேகமாக பஸ்ஸை ஓட்டுகிறார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

டிரைவர் அருகே அமர்ந்து கியர் மாற்றும் கல்லூரி மாணவிகள்
டிரைவர் அருகே அமர்ந்து கியர் மாற்றும் கல்லூரி மாணவிகள் ( screenshot From Facebook Video )

``கும்முறு டப்பர.... கும்முறு டப்பர.... கும்முறு டப்பர... கும்முறு டப்பர... கும்மறு கும்மறு கும்மறு கும்மாறா..." - எனப் பாடல் ஒலிக்க, அந்தப் பாடலுக்கு அதற்கு ஏற்ப டூரிஸ்ட் பஸ்ஸில் கியர் மாற்றுகிறார்கள் கல்லூரி மாணவிகள். ``காந்தக் கண்ணழகி, லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் முத்துப் பல் அழகி... சோடி சேர வாடி’ என்று பாடல் தொடர்ந்து ஒலிக்க, பின்னால் இருந்த கல்லூரி மாணவிகளை கியர்போட அனுமதித்தபடியே சிரித்தபடி ஸ்டியரிங்கைச் சுற்றியபடி வேகமாக பஸ்ஸை ஓட்டுகிறார் டிரைவர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

கல்லூரி மாணவிகள்
கல்லூரி மாணவிகள்
screenshot From Facebook Video

கேரளாவில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவை போக்குவரத்துத் துறை கமிஷனருக்கு சிலர் அனுப்பி வைத்தனர். அதுகுறித்து மோட்டார் வாகன பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த ஷாஜி என்பவர் டூரிஸ்ட் பஸ்சை ஓட்டியதும், கோவாவுக்குச் சுற்றுலா சென்ற அரசு கல்லூரி மாணவிகளை பாடலுக்கு ஏற்ப கியர் மாற்ற அனுமதித்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து என்போர்ஸ்மென்ட் ஆர்.டி.ஓ பிஜூ ஜெயிம்சிங் அலுவலகத்திற்கு டரைவர் ஷாஜி அழைக்கப்பட்டார். அங்கு நடந்த விசாரணை முடிவில் டிரைவர் ஷாஜி தான் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.

கல்லூரி மாணவிகள்
கல்லூரி மாணவிகள்
screenshot From Facebook Video

இதையடுத்து ஷாஜியின் ஓட்டுநர் உரிமத்தை ஆறு மாதத்திற்குத் தடை செய்து ஆர்.டி.ஓ உத்தரவிட்டார். விபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அபாயத்தை ஏற்படுத்தும் விதமாகவும் வாகனம் ஓட்டியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஓ பிஜூ ஜெயிம்சிங் கூறினார்.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...!