Published:Updated:

Viral Video: கங்கைநதி பாலத்திலிருந்து டைவ் அடித்து, அசால்ட்டாக நீந்திக் கரையேறிய 70 வயது பாட்டி!

Viral Video - பாட்டி

70 வயது மூதாட்டி ஒருவர் கங்கைநதியில் டைவ் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் அமைந்திருக்கும் ஹர்கி பைடி பாலத்திலிருந்து 70 வயது மூதாட்டி ஒருவர் கங்கைநதியில் டைவ் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.

அசோக் பசோயா என்ற பயனர் ட்விட்டரில் இந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார். வீடியோவில், ஹர்கி பைடி பாலத்திலிருந்து கங்கைநதியில் 70 வயதான மூதாட்டி ஒருவர் எந்தவித அச்சமுமின்றி குதிக்கிறார். பின்னர் அசால்ட்டாக நதியில் நீச்சலடித்துக் கொண்டு கரையேறுகிறார். அங்கு கூடியிருக்கும் மக்கள் அதைப் பார்த்து, கத்திக் கூச்சலிட்டு, ஆரவாரம் செய்கின்றனர்.

இணையத்தில் வைரலாகிவரும் இந்த வீடியோவுக்கு, ``பாட்டிக்கு தில் அதிகம்தான்!" என கமென்ட் செய்து அவரைப் பாராட்டிவருகின்றனர் இணையவாசிகள்.

பாட்டியைப் பார்த்துவிட்டு யாரும் முறையான பயிற்சியின்றி முயற்சி செய்ய வேண்டாம் பாஸ்! 😄😄😄

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!