Published:Updated:

எலானுக்கு 9, அவரின் அப்பா எராலுக்கு 8 - இது மஸ்க்கின் குடும்பக் கணக்கு!

Elon Musk, Errol musk

எரால் மஸ்க் செய்த இந்த விஷயத்தில் எலானுக்கு சுத்தமாக இஷ்டமில்லை. காரணம் கொஞ்சம் வில்லங்கமானதுதான். எரால் இப்போது தந்தையாகியிருப்பது அவரின் மாற்றாள் மகளான (Step Daughter) ஜனாவுடன்.

எலானுக்கு 9, அவரின் அப்பா எராலுக்கு 8 - இது மஸ்க்கின் குடும்பக் கணக்கு!

எரால் மஸ்க் செய்த இந்த விஷயத்தில் எலானுக்கு சுத்தமாக இஷ்டமில்லை. காரணம் கொஞ்சம் வில்லங்கமானதுதான். எரால் இப்போது தந்தையாகியிருப்பது அவரின் மாற்றாள் மகளான (Step Daughter) ஜனாவுடன்.

Published:Updated:
Elon Musk, Errol musk
எலான் மஸ்க்கின் தந்தையான எரால் மஸ்க் 76 வயதில் மீண்டும் அப்பாவாகியிருக்கிறார்.

செய்தி தப்பா போட்டிருக்கீங்க, எலான் மஸ்க்தான் இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையானார்னு செய்தி படிச்சோம்ன்னு யோசிக்கறீங்களா? அதுவும் சரியான செய்திதான். அதற்கும் சில வாரங்களுக்கு முன்னர், எலான் மஸ்க் தந்தையானார் என இன்னொரு செய்தி வந்திருக்கும். அதுவும் சரியான செய்திதான். மஸ்க் குடும்பம் ட்விட்டரில் மட்டும் டிரெண்ட்டாகவில்லை. சர்வதேச ஊடகங்களிலும் டிரெண்டாகி வருகின்றனர். எலானும், அவரின் தந்தை எரால் மஸ்க்கும் மாறி மாறி தந்தை ஆகிக்கொண்டிருக்கிறார்கள்.

"நாம் இருப்பதே இனப்பெருக்கத்திற்காகத்தானே. இன்னும் வாய்ப்புக்கிடைத்தால் இன்னும் ஒரு குழந்தை பெற முயல்வேன்" என சீரியஸாகப் பேட்டியளித்திருக்கிறார் எரால் மஸ்க். எலான் மஸ்க், ட்வின்ஸ் குழுந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு, "குறைந்துவரும் மக்கள்தொகையை ஈடுகட்ட, என்னாலான பங்களிப்பைச் செய்துவிட்டேன்" என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், எரால் மஸ்க் செய்த இந்த விஷயத்தில் எலானுக்கு சுத்தமாக இஷ்டமில்லை. காரணம் கொஞ்சம் வில்லங்கமானதுதான். எரால் இப்போது தந்தையாகியிருப்பது அவரின் மாற்றாள் மகளான (Step Daughter) ஜனாவுடன். எராலின் முதல் மனைவி மேய் ஹால்டிமேன். மேய் ஹால்டிமேன் மூலம்தான் எராலுக்கு எலான் மஸ்க் பிறக்கிறார். கிம்பல் என்கிற மகனும், டோஸ்க் என்கிற மகளும் எலானுடன் பிறந்தவர்கள்.

ஒன்பது வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு எரால், மேய் ஹால்டிமேனை விவாகரத்து செய்துவிடுகிறார். அதன் பின்னர், ஹெய்டியை மணந்துகொள்கிறார் எரால். ஹெய்டிக்கு ஏற்கெனவே முந்தைய திருமணத்தின் மூலம் ஜனா என்கிற பெண் குழந்தை உண்டு. எரால் ஹெய்டியை மணந்துகொள்ளும் போது, ஜனாவுக்கு நான்கு வயது. இருவரும் இணைந்துதான் ஜனாவை வளர்க்க ஆரம்பித்தனர்.

Jana
Jana

ஏற்கெனவே தன்னைவிட 42 வயது குறைவான ஜனாவின் மூலம், எரால் மஸ்கிற்கு ருஷி என்கிற ஐந்து வயது மகன் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதே குடும்பத்துக்குள் அது பெரும் பூகம்பத்தை உண்டாக்கியது. "ஜனாவால் இவ்வாறு எப்படி நடந்துகொள்ள முடிகிறது?" என அப்போதே எராலின் மகள் கேள்வியெழுப்பினார். காரணம் அவர்களுக்கு ஜனா, சகோதரி முறை.

மூன்று வருடமாக ரகசியமாக வைத்திருந்த இந்த இரண்டாம் குழந்தை விஷயத்தையும் தற்போது போட்டு உடைத்திருக்கிறார் எரால். "நான் இதுவரையில் எந்த DNA சோதனையும் செய்யவில்லை. ஆனால், இந்தப் பெண் குழந்தை என் மற்ற பெண் குழந்தைகள் போலத்தான் இருக்கிறாள். இந்தக் குழந்தை நாங்கள் திட்டமிட்டு பெற்றுக்கொள்ளவில்லை. ருஷி பிறந்தபின்னர் 18 மாதங்கள், ஜனா இங்குதான் இருந்தாள். அப்போது இப்படி நடந்திருக்கலாம். நான் குழந்தை பெற்றுக்கொள்வதை பலர் நக்கல் அடிக்கிறார்கள். குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றி நான் யோசித்திருந்தால், எலான் மஸ்க் கூட பிறந்திருக்க மாட்டார்" என நக்கல் அடிக்கிறார் எரால் மஸ்க்.

Elon Musk with his mother Maye Musk
Elon Musk with his mother Maye Musk

எலான் மஸ்க்கும் இந்த விஷயத்தில் தந்தையுடன் போட்டா போட்டியில்தான் இருக்கிறார். அவர் தன்னுடன் படித்த ஜஸ்டின் வில்சனை முதலில் திருமணம் செய்துகொண்டார். முதல் குழந்தை பத்து வாரங்களில் இறந்துவிட, அதன்பின்னர் IVF முறையில் இரட்டையர்களையும், அதன் பின்னர் ட்ரிப்லெட்டையும் (ஒரே சமயத்தில் மூன்று குழந்தைகள்) பெற்றெடுத்தனர். அதன்பின்னர் ஜஸ்டினை விவாகரத்து செய்தார் எலான் மஸ்க். 2008-ம் ஆண்டு ஆங்கில நடிகை தலுலா ரைலியை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் ரைலியை விவாகரத்து செய்து, மறுபடியும் திருமணம் செய்து, பின் மீண்டும் இரண்டாவது முறையாக 2016ல் விவகாரத்து செய்தார்.

இதன் பின்னர் கனடிய இசையமைப்பாளரான க்ரைம்ஸை டேட் செய்ய ஆரம்பித்தார் எலான் மஸ்க். மே 2020ல் இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு இவர்கள் சூட்டிய பெயர் பயங்கர வைரல். X AE A-XII மஸ்க். இதுதான் பெயர். இரண்டாவது குழந்தைக்கு Exa Dark Sideræl Musk எனப் பெயரிட்டனர். செல்லமாக முதல் குழந்தையின் பெயர் X, இரண்டாம் குழந்தையின் பெயர் Y.

Grimes
Grimes

இந்தச் சூழலில்தான் தற்போது எராலைப் போலவே எலான் மஸ்க்கும் மீண்டும் தந்தையாகியிருக்கிறார் எனச் செய்திகள் வலம் வர தொடங்கியிருக்கின்றன. தன்னுடைய நியூராலிங் நிறுவனத்தின் செயல் அதிகாரியான ஷிவான் ஜில்ஸுடன் இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையாகியிருக்கிறார் எலான் மஸ்க். வேலை இடங்களில் தனக்குக்கீழ் வேலை பார்க்கும் ஒரு பெண்மணியுடன் எலான் பெற்றிருக்கும் இந்த இரட்டைக் குழந்தைகள் விஷயம் சர்ச்சையாகியிருக்கிறது. ஆக, மொத்தம் இறந்த ஒரு குழந்தையைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் எலான் மஸ்க்கிற்கு 9 குழந்தைகள் இருக்கிறார்கள். எலானின் தந்தை எராலுக்கு 8 குழந்தைகள் இருக்கிறார்கள்.