Published:Updated:

Elon Musk: கோகோ கோலா நிறுவனத்தை வாங்கப் போகிறாரா? ட்விட்டரில் வைரலாகும் எலானின் பதிவு!

எலான் மஸ்க்

"கவனியுங்கள், என்னால் அதிசயங்களை நிகழ்த்தமுடியாது" என ட்வீட் செய்திருக்கிறார் எலான் மஸ்க்.

Elon Musk: கோகோ கோலா நிறுவனத்தை வாங்கப் போகிறாரா? ட்விட்டரில் வைரலாகும் எலானின் பதிவு!

"கவனியுங்கள், என்னால் அதிசயங்களை நிகழ்த்தமுடியாது" என ட்வீட் செய்திருக்கிறார் எலான் மஸ்க்.

Published:Updated:
எலான் மஸ்க்

ட்விட்டர் முழுக்க ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய விவகாரம்தான் ட்ரெண்ட். இந்த ஆச்சர்ய அலை ஓய்வதற்குள் எலான் மஸ்க் அடுத்து தான் வாங்கப் போகிற கம்பெனி குறித்து ட்வீட் செய்திருக்கிறார். எஸ்சைட் ஆகாதீங்க மக்களே. சர்காஸ்டிக் ஆகதான் பதிவிட்டு இருக்கிறார் எலான்.

எலான் ட்விட்டரில் "நான் அடுத்து கோகோ-கோலா வாங்கவுள்ளேன் மீண்டும் கொக்கைன் சேர்க்க" என பதிவிட்டு உள்ளார்.

கோகோ கோலா முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் உட்சேர்க்கை பொருட்களில் கோகோ இலைகள் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கொக்கைன் தன்மை நீக்கப்பட்ட கோகோ இலைகளை தயாரிப்பில் பயன்படுத்தத் தொடங்கினர். கோகோ இலைகளில் இருந்து தான் போதை பொருளான கொக்கைன் தயாரிக்கப்படுகிறது.

1885 அட்லாண்டாவை சேர்ந்த மருந்தாளுனர் John Pemberton கோகோ கோலாவை மருந்தாகத் தான் முதலில் அறிமுகப்படுத்தினார். கடுமையான தலைவலி, வயிற்று வலி உள்ளிட்டவற்றுக்குத் தீர்வாக இது கொண்டு வரப்பட்டது. கொக்கைன் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பொருள். "1894-ல் விற்கப்பட்ட கோகோ கோலாவில் 3.5 கிராம் கொக்கைன் இருந்தது. அதை மீண்டும் கொண்டு வாங்க" என ஒருவர் கமென்ட் செய்திருக்கிறார்.

எலான், "நான் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தை வாங்கி ஐஸ் கிரீம் மெஷின்களை சரி செய்ய போகிறேன்" என ஏற்கெனவே பதிவிட்டிருந்ததை மீண்டும் பகிர்ந்து "கவனியுங்கள், என்னால் அதிசயங்கள் நிகழ்த்த முடியாது" என ட்வீட் செய்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கள நிலவரம் என்னவென்றால் கோகோ கோலாவின் சந்தை மதிப்பு 284 பில்லியன் டாலர்கள். எலானின் நிகர மதிப்பாக சொல்லப்படுவதே 269 பில்லியன் டாலர்கள்தான். ஆனாலும் இவரை நம்ப முடியாது. 2017-ல் ட்விட்டர் என்ன விலைன்னு கேட்டுட்டு 5 வருடங்களுக்கு பிறகு அதனை வாங்கவும் செய்திருக்கிறார்.

Dogecoin NFT கிரியட்டர் ஷிபேடோஷி "அப்படியே fox ஸ்டுடியோவையும் வாங்குங்க. firefly சிரீஸ் பார்க்கணும்" என கமென்ட் பதிவு செய்துள்ளார். இப்படி நெட்டிசன்கள் பல்வேறு நிறுவனங்களை வாங்க சொல்லி கமென்ட் செய்த வண்ணம் உள்ளனர். நீங்க எந்த நிறுவனத்தை வாங்கி எதை சரி செய்யணும் என கமென்டில் சொல்லுங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism