Published:Updated:

`சோஷியல் மீடியா ஆக்சஸை எங்ககிட்ட கொடு!' - பார்ட்டி, பாய் ஃப்ரெண்ட்ஸ்... பெற்றோரின் ஜாலி தண்டனை

இனி இப்படி ஒரு தவற்றை தன் மகள் செய்யக்கூடாது என்று நினைத்த மேட்லினின் பெற்றோர், ஒரு முடிவு எடுத்தனர். அவர்கள் இரண்டு தண்டனைகளைத் தன் மகளிடம் சொல்லி, 'இதில் ஒன்றை நீயே தேர்ந்தெடுத்துக்கொள்' என்றனர்.

மேட்லின்
மேட்லின் ( Instagram.com )

'கில்லி' படத்தில் விஜய், த்ரிஷாவை தனது வீட்டுக்கு அழைத்து வந்து வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் மறைத்துவைக்க படாத பாடுபட்டு, கடைசியில் மாட்டிக்கொள்வர். இதுபோல், அமெரிக்காவில் ஒரு டீன் ஏஜ் பெண் தனது வீட்டில் நடைபெற்ற விழாவுக்கு தன் நண்பர்களை அழைத்து, ஆனால் பெற்றோர் அவர்களின் வருகையை அறிந்தால் விரும்ப மாட்டார்கள் என்பதால் அவர்களை மறைத்துவைக்க முயன்று, கடைசியில் மாட்டிக்கொண்டார். அதற்கு அவரின் பெற்றோர் கொடுத்த ஜாலி தண்டனைதான், இப்போது இணையத்தில் வைரல்.

வித்தியாச தோற்றம்; சோஷியல் மீடியா நாயகன் `லில் பப்'! - வைரல் பூனை மறைவால் கலங்கும் நெட்டிசன்கள்
மேட்லின் குடும்பம்
மேட்லின் குடும்பம்
Instagram.com

அமெரிக்காவைச் சேர்ந்த 15 வயதுப் பெண்ணான மேட்லின், தனது வீட்டில் நடைபெற்ற பார்ட்டிக்குத் தன் ஆண் நண்பர்களைப் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அழைத்துள்ளார். வீட்டுக்கு வந்த நண்பர்களை, பெற்றோரின் கண்களில் படாமல் மறைத்துவைக்க முயன்றபோது, மேட்லின் தன் பெற்றோரிடம் மாட்டிக்கொண்டார்.

இனி இப்படி ஒரு தவற்றை தன் மகள் செய்யக்கூடாது என்று நினைத்த மேட்லினின் பெற்றோர், ஒரு முடிவு எடுத்தனர். அவர்கள் இரண்டு தண்டனைகளைத் தன் மகளிடம் சொல்லி, 'இதில் ஒன்றை நீயே தேர்ந்தெடுத்துக்கொள்' என்றனர்.

தண்டனைகள் என்னவென்றால், மேட்லின் ஒரு மாதம் மொபைல் பயன்படுத்தக் கூடாது. இரண்டு வாரங்களுக்கு மேட்லினின் சோஷியல் மீடியா பக்கங்களை அவளின் பெற்றோர்கள் பயன்படுத்துவார்கள் என்பவையே.

'மொபைல் இல்லாமல் ஒரு நாள்கூட இருக்க முடியாது, இதில் எங்கே ஒரு மாதம் தாக்குப்பிடிக்க முடியும்' என்று நினைத்த மேட்லின், பெற்றோர் சொன்ன இரண்டாவது தண்டனையை ஏற்றுக்கொண்டார். அதன்படி மேட்லினின் சோஷியல் மீடியா ஆக்சஸ் அவரின் பெற்றோரிடம் சென்றது. பிறகுதான் ஆரம்பித்தன அந்தத் தரமான சம்பவங்கள்!

மேட்லினின் அப்பா லாரி சம்ப்டர், மேட்லினின் இன்ஸ்டாகிராம், டிக்-டாக் பக்கங்களில், தான் எடுக்கும் வித்தியாசமான புகைப்படங்களையும் நகைச்சுவை வீடியோக்களையும் பதிவிடத் தொடங்கிவிட்டார். அவற்றில், அவர் பெண்களின் உடை அணிந்து பதிவிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் அதிகளவில் லைக்குகளையும் கமென்ட்களையும் பெற்றன.

இன்ஸ்டாகிராம் பதிவு
இன்ஸ்டாகிராம் பதிவு
Instagram.com

மேலும் இன்ஸ்டாகிராமில் மேட்லினின் புகைப்படத்தைப் பதிவிட்ட அந்தத் தம்பதி, "இது மேடி. இவள் தனது சோஷியல் மீடியா கன்ட்ரோலை இரண்டு வாரங்களுக்கு அவளின் பெற்றோருக்குக் கொடுத்துவிட்டாள். எனவே, நீங்கள் சுவாரஸ்யமான சில பதிவுகளை அவளின் பெற்றோரிடமிருந்து எதிர்பார்க்கலாம்" என்று ஜாலி போஸ்ட் போட, மேட்லினின் நண்பர்கள் அவரைக் கிண்டல் செய்யத் தொடங்கினர். இதையெல்லாம் சமாளிக்க முடியாமல், மேட்லின் தன் பெற்றோரிடம் சென்று, தான் ஒரு மாதம் மொபைல் இல்லாமல் இருக்கும் தண்டனையையே ஏற்றுக்கொள்வதாகக் கெஞ்சியுள்ளார். ஆனால், 'ஒரு தடவை முடிவு பண்ணிட்டா எங்க பேச்சை நாங்களே கேட்கமாட்டோம்' என்ற ரீதியில் அவரை அனுப்பிவிட்டனர் அவரின் பெற்றோர்.

`புதுமண தம்பதியருக்கு நண்பர்கள் தந்த வெங்காய பொக்கே!' -விலை எவ்வளவு தெரியுமா?

பெற்றோர் - மகளின் இந்த சுவாரஸ்ய தண்டனைச் சம்பவங்கள் இணையத்தில் வைரலாக, அமெரிக்கப் பத்திரிகை ஒன்று, அதைச் செய்தியாக்கியது. மேட்லினின் பெற்றோர், அந்தச் செய்தியையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மாஸ் காட்டியுள்ளனர்.

மேட்லினின் அப்பா
மேட்லினின் அப்பா
Instagram.com

'இந்த வித்தியாசமான தண்டனையால் ஆண் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வருவதை மட்டுமல்ல, தன் ஆண் நண்பர்களையே மறந்திருப்பார் மேட்லின்' என்று பலரும் சிரித்தபடி கமென்ட் செய்து வருகிறார்கள். பிள்ளைகளுக்கு ரூம் போட்டு யோசித்து தண்டனை கொடுப்பதில், இந்தியப் பெற்றோர்களைத் தாண்டிவிட்டார்கள் இந்த அமெரிக்கப் பெற்றோர்!