Published:Updated:

வைரலான நடன வீடியோ; மாட்டிக்கொண்ட பின்லாந்தின் இளம் பிரதமர்; சர்ச்சைக்கு அதிரடி பதில்!

பின்லாந்துப் பிரதமர் சன்னா மரின் வைரல் வீடியோ

"அரசியல்வாதி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை" - பின்லாந்துப் பிரதமர் சன்னா மரின் விளக்கம்.

வைரலான நடன வீடியோ; மாட்டிக்கொண்ட பின்லாந்தின் இளம் பிரதமர்; சர்ச்சைக்கு அதிரடி பதில்!

"அரசியல்வாதி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை" - பின்லாந்துப் பிரதமர் சன்னா மரின் விளக்கம்.

Published:Updated:
பின்லாந்துப் பிரதமர் சன்னா மரின் வைரல் வீடியோ
உலகின் இளம் வயது பிரதமர் என்ற பெருமைக்குரியவர் பின்லாந்துப் பிரதமர் சன்னா மரின். சோசியல் டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த இவர் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 2015-ம் ஆண்டு தனது 34-வது வயதில் பின்லாந்து நாட்டின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று இவரை "உலகின் சிறந்த பிரதமர்" என்று சிறப்பித்திருந்தது. இதையடுத்து சில நாள்களுக்கு முன் பார்ட்டி ஒன்றில் சன்னா மரின் வெறித்தனமாக நடனமாடும் காணொலி சமூகவலைதளங்களில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பார்ட்டியில் சன்னா மரின் போதைப்பொருளை உட்கொண்டு இருந்ததாகவும், மதுபோதையில் நண்பர்களுடன் சுய நினைவை இழந்த நிலையில் நடனமாடியதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும் சட்டவிரோதமாகப் போதைப்பொருளை உட்கொண்டது தொடர்பான சர்ச்சையில் சன்னா மரின் தாமாக முன்வந்து போதைப்பொருள் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

பின்லாந்துப் பிரதமர் சன்னா மரின்
பின்லாந்துப் பிரதமர் சன்னா மரின்

இந்தச் சூழலில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள சன்னா மரின், "எனது தனிப்பட்ட விஷயங்கள் பொதுவெளியில் பேசுபொருளாகியிருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. என் நண்பர்களுடன் நான் பார்டிக்குச் செல்வது என் அன்றாட வாழ்வின் வழக்கமான ஒன்றுதான். அங்கு நான் ஆடியது பாடியது அனைத்தும் உண்மைதான். ஆனால், நான் அப்போது மது மட்டுமே அருந்தியிருந்தேன். சட்டவிரோதமாக வேறெந்த போதைப்பொருள்களையும் உட்கொள்ளவில்லை. பார்டிக்குச் செல்வது, ஆடுவது, பாடுவது போன்றவை சட்டவிரோதமான செயல்கள் அல்ல. சட்டத்திற்குப் புறம்பாக நான் எதையும் செய்ததில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனவே சட்டவிரோதமாகப் போதைப்பொருள் உட்கொண்டது தொடர்பாக எந்த மருத்துவச் சோதனை எடுத்தாலும் எனக்குப் பிரச்னை இல்லை. மேலும், என் வயதுடைய பலரைப் போலவே எனக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. என் நண்பர்களுடன் செலவழிக்க எனக்கு ஓய்வு நேரம் உள்ளது. அரசியல்வாதி என்பதால் என்னுடைய தனிப்பட்ட வாழ்வைப் புறக்கணிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.