Published:Updated:

திடீர் விஜிலென்ஸ் ரவுண்ட்அப்; தப்பிக்க லஞ்சப் பணத்தை விழுங்கிய போலீஸ் எஸ்.ஐ! - வைரலாகும் வீடியோ

லஞ்சப் பணத்தை விழுங்கிய போலீஸ் எஸ்.ஐ ( ட்விட்டர் )

ஹரியானா மாநிலத்தில் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்பு போலீஸார் தன்னைச் சுற்றிவளைத்ததும், அந்தப் பணத்தை விழுங்க முயன்றார். இது தொடர்பான வீடியோ வைரலாகிவருகிறது.

ஹரியானா மாநிலம், ஃபரிதாபத்தைச் சேர்ந்தவர் மகேந்திரா. இவர் ஃபரிதாபாத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவந்தார். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சம்பு நாத் என்பவர் தன்னுடைய மாடு காணாமல்போனதாக போலீஸில் புகார் அளித்திருக்கிறார். அப்போது மகேந்திரா, காணாமல்போன மாட்டைக் கண்டுபிடிக்க ரூ.10,000 லஞ்சம் கேட்டிருக்கிறார். இதையடுத்து முன்பணமாக ரூ.6 ஆயிரத்தை சம்பு நாத் கொடுத்திருக்கிறார். மீதமுள்ள பணத்தைப் பிறகு கொடுப்பதாகக் கூறியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, சம்பு நாத் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் இது தொடர்பாகப் புகார் அளித்திருக்கிறார். அதன் பிறகு மகேந்திராவைக் கையும் களவுமாகப் பிடிக்க முடிவுசெய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், மீதமுள்ள ரூ.4,000 பணத்தை அவரிடம் கொடுக்கும்போது பிடிக்க திட்டமிட்டு, அதற்கான ஏற்படுகளைச் செய்திருக்கின்றனர். அதன்படி சம்பு நாத் பணத்தைக் கொடுக்கும்போது அதை வீடியோவாகப் பதிவுசெய்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். நடப்பதை அறிந்து சுதாரித்துக்கொண்ட மகேந்திரா, அந்தப் பணத்தை வாயில் போட்டு விழுங்க முயன்றிருக்கிறார். ஆனால், லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரின் வாயில் கைவிட்டு அந்தப் பணத்தை மீட்க முயன்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.