Published:Updated:

`மனித சானிடைஸர்' - சர்ச்சையில் சவுதி எண்ணெய் நிறுவனம்!

சானிடைஸர்
சானிடைஸர்

முகக்கவசம் அணிந்தபடியும் ஹேண்ட் சானிடைஸர் என்று எழுதி ஒட்டப்பட்ட டிஸ்பென்சர் பெட்டியைச் சுமந்தபடியும் அலுவலகத்தைச் சுற்றிவரும் அந்த நபரின் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

உலகமே கொரோனா பயத்தில் அலறிக்கொண்டிருக்கும் நேரத்தில், சவுதியில் உள்ள பிரபல எண்ணெய் நிறுவனம் நெட்டிசன்களின் கமென்ட்டுகளால் அலறிக்கொண்டிருக்கிறது.

பல நிறுவனங்கள் கொரோனா வைரஸிலிருந்து தங்களின் பணியாளர்களைப் பாதுகாக்க, ஹேண்ட் சானிடைஸர்களை அலுவலக வளாகங்களில் வைத்திருக்கும் நிலையில், சவுதியில் உள்ள அராம்கோ எனும் ஆயில் நிறுவனம், தன்னுடைய அலுவலகத்தில் வைத்திருக்கும் ஹேண்ட் சானிடைஸர் சர்ச்சையாகி இருக்கிறது.

அராம்கோ ஆயில் நிறுவனம்
அராம்கோ ஆயில் நிறுவனம்

இந்த ஆயில் நிறுவனம், நாடுவிட்டு நாடுவந்து வேலை செய்யும் தன் பணியாளர் ஒருவரை நடமாடும் ஹேண்ட் சானிடைஸராக அலுவலக வளாகத்தில் உலவவிட்டிருக்கிறது.

முகக்கவசம் அணிந்தபடியும் ஹேண்ட் சானிடைஸர் என்று எழுதி ஒட்டப்பட்ட டிஸ்பென்சர் பெட்டியைச் சுமந்தபடியும் அலுவலகத்தைச் சுற்றிவரும் அந்த நபரின் புகைப்படம் ட்விட்டரில்  வைரலாகி வருகிறது.

இதற்கு, குவைத் நாட்டின் கார்ட்டூனிஸ்ட் அப்துல் ரஹ்மான் புலாந்த், ' And we have honored the children of Adam' எனும் தலைப்புடன் 'மனித ஹேண்ட் சானிடைஸர்' நபர் அழுது கொண்டிருப்பதைப்போல படம் வரைந்து வெளியிட்டிருக்கிறார்.

அந்த நிறுவனத்தின் இச்செயலை `அடிமைத்தனம் ஒழிக்கப்படவில்லை, புதிய வடிவம் பெற்றிருக்கிறது', `இனவாதம்', ' நவீன அடிமைத்தனம்' என நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளோடு காட்டமாகப் பதிந்து வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளிலிருந்து எதிர்ப்புக் குரல் வலுக்கவே, அராம்கோ நிறுவனம் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்து மன்னிப்பு கோரியிருக்கிறது. `எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம், சம்பந்தப்பட்ட நபரிடம் மன்னிப்பு கேளுங்கள்' என மக்கள் காட்டமாக கமென்ட்டளித்து வருகின்றனர்.

சவுதி மசூதி
சவுதி மசூதி
மாஸ்க், ஹேண்ட் சானிடைஸர் இல்லை... சளி, காய்ச்சலுக்கு ஜி.ஹெச்சா? கொரோனா சந்தேகங்களுக்குப் பதில்!

கோவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றால் சவுதியில் இதுவரை 21 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொற்று பரவுவதைத் தடுக்க மசூதிகளில் தொழுகை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

தவிர, கொரோனா பாதிப்புள்ள நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கும் அங்கிருந்து பயணிகள் சவுதிக்கு வருவதற்கும் தடை விதித்திருப்பதையும் இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது..

அடுத்த கட்டுரைக்கு