Published:Updated:

``அப்படி ஒரு விமானமே இல்லையே..!" - டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி

விமானம்

``அப்படி எந்த விமானமும் இந்த வழித்தடத்தில் இப்போது இயக்கப்படுவதில்லை. ஒரு மாதத்துக்கு முன்பே அந்த விமான சேவை நிறுத்தப்பட்டுவிட்டது" என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

``அப்படி ஒரு விமானமே இல்லையே..!" - டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி

``அப்படி எந்த விமானமும் இந்த வழித்தடத்தில் இப்போது இயக்கப்படுவதில்லை. ஒரு மாதத்துக்கு முன்பே அந்த விமான சேவை நிறுத்தப்பட்டுவிட்டது" என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Published:Updated:
விமானம்

அமானுஷ்ய நிகழ்வுகள் சில நேரங்களில் நமது வாழ்வில் நடப்பதுண்டு. ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் உண்மைக் காரணம் தெரியவரும்போது `இதுக்குத்தானா இப்படி பயந்தோம்' என நம்மை நாமே கிண்டல் செய்துகொள்வதும் உண்டு. அது போன்ற ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்திருக்கிறது. ஹைதராபாத் விமான தளத்திலிருந்து டெல்லிக்கு `கோ ஃபர்ஸ்ட்’ (Go First) எனும் விமானம் இயக்கப்பட்டிருக்கிறது. இது ஹைதராபாத்திலிருந்து டெல்லிக்குச் செல்லும் விமானம்.

முன்பதிவு
முன்பதிவு

இந்த நிலையில், திங்கள்கிழமை ஹைதராபாத் - டெல்லி செல்லும் விமானத்துக்கு ஏராளமான பயணிகள் `Happy Fares' எனும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், அந்த விமான டிக்கெட் உறுதியானது தொடர்பான எந்தத் தகவலும் இமெயில், அல்லது தொலைபேசி வழியாக பயணிகளுக்கு வழங்கப்படவே இல்லை. திங்கள்கிழமையன்று விமான நிலையத்தில் பயணிகள் காத்திருந்தபோதுதான் பயணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும்விதமாக, `கோ ஃபர்ஸ்ட் (Go First) விமானமா... அப்படி எந்த விமானமும் இந்த வழித்தடத்தில் இப்போது இயக்கப்படுவதில்லையே... ஒரு மாதத்துக்கு முன்பே அந்த விமான சேவை நிறுத்தப்பட்டுவிட்டது' எனத் தெரிவித்திருக்கின்றனர்.

விமான நிலையம்
விமான நிலையம்

அதன் பிறகு சூழலை உணர்ந்த பயணிகள், தங்களின் முன்பதிவு குறித்த ஆவணங்களைக் காண்பித்து விசாரித்தபோதும், சரியான தகவல் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பயணிகள், "இல்லாத விமானத்துக்கு எப்படி முன்பதிவு செய்ய முடியும்... இது பேய் (Ghost) விமானமா என்ன... அந்த விமான நிறுவனத்துக்கு எதிராகவும், டிக்கெட்டுகளை வழங்கிய கவுஹாத்தியைச் சேர்ந்த `Happy Fares' மீதும் DGCA உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இது தொடர்பாக விமான டிக்கெட் முன்பதிவு செய்த GoFlySmart -ன் உரிமையாளர் அன்கித் அகர்வால், "தொழில்நுட்பக் காரணங்களால் `Go First' PNR இணையதளத்தில் நேரலையில் இருந்தது. அதனால், அது மீண்டும் செயல்படும் என்று நாங்கள் நினைத்தோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.