Published:Updated:

`டாக்டர், எனக்கு என்னாச்சுனு பாருங்க!' - தனியாகவே மாஸ்க் அணிந்து மருத்துவரிடம் சென்ற 3 வயது சிறுமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாகலாந்து சிறுமி லிபாவி 
நாகலாந்து சிறுமி லிபாவி  ( Twitter Photo: @YepthomiBen )

கோவிட் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று டெஸ்ட் செய்தால் பாசிட்டிவ் காட்டிவிடுமோ எனப் பெரியவர்களே பயப்படுகிறார்கள். இந்த மாதிரியான சூழலில் மூன்று வயதுக் குழந்தையின் தைரியமும் பொறுப்புணர்ச்சியும் நெட்டிசன்களைக் கவர்ந்திருக்கிறது.

நாகலாந்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி லிபாவிக்கு சமூக வலைதளங்களில் திடீர் வாழ்த்து மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. முகக்கவசம் அணிந்தபடி மருத்துவரின் அருகே நாற்காலியில் அமர்ந்துகொண்டு சிகிச்சைக்காகப் பேசிக்கொண்டிருக்கும் லிபாவியின் புகைப்படம்தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்.

நாகலாந்து சிறுமி லிபாவி 
நாகலாந்து சிறுமி லிபாவி 
Twitter Photo: @YepthomiBen

`இத்தனை சிறு வயதில் எவ்வளவு பொறுப்புணர்ச்சி இந்தக் குழந்தைக்கு. எப்படி இந்த மூன்று வயதுக் குழந்தை தனியாக மருத்துவமனைக்குச் சென்றதோ... அந்தக் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் வாழப் பிரார்த்திக்கிறேன். தைரியமான சிறுமி இவள். குட்டி சூப்பர் வுமன்' என நாகலாந்து சிறுமி லிபாவிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அப்படி என்ன செய்துவிட்டார் அந்தச் சிறுமி என்று கேட்பவர்களுக்கு...

சளி அறிகுறிகள் தென்படவே முகக்கவசம் அணிந்துகொண்டு பெரியவர்கள் துணையின்றி மருத்துவரை அணுகியிருக்கிறார் சிறுமி லிபாவி. நாகலாந்தில் இருக்கும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையத்துக்கு லிபாவி செல்ல, மருத்துவரே ஆச்சர்யப்பட்டுப் போயிருக்கிறார். பெற்றோர்கள் வேலைக்காக வயலுக்குச் சென்றதால், தானாகவே மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார் அந்தச் சிறுமி.

நாகலாந்து சிறுமி லிபாவி 
நாகலாந்து சிறுமி லிபாவி 
Twitter photo : @YepthomiBen

கோவிட் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று டெஸ்ட் செய்தால் பாசிட்டிவ் காட்டிவிடுமோ எனப் பெரியவர்களே பயப்படுகிறார்கள். இந்த மாதிரியான சூழலில் மூன்று வயதுக் குழந்தையின் தைரியமும் பொறுப்புணர்ச்சியும் நெட்டிசன்களைக் கவர்ந்திருக்கிறது. பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் என்றும் வீண் போவதில்லை, பெரியவர்கள் தவறிழைக்கும்போது குழந்தைகளே அவர்களின் செய்கைகளின் மூலம் நம்மை மாற்றுகிறார்கள் என ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது மூன்று வயதுச் சிறுமி லிபாவியின் செயல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு