Published:Updated:

வைரல் வீடியோ: மாணவர் சங்கத் தேர்தல்... மாணவ,மாணவிகள் காலில் விழுந்து வாக்கு கேட்ட மாணவ வேட்பாளர்கள்!

ராஜஸ்தான் கல்லூரி மாணவர்

பெரும் வைரலாகிவரும் இந்த வீடியோ, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்தும் இன்னும் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

வைரல் வீடியோ: மாணவர் சங்கத் தேர்தல்... மாணவ,மாணவிகள் காலில் விழுந்து வாக்கு கேட்ட மாணவ வேட்பாளர்கள்!

பெரும் வைரலாகிவரும் இந்த வீடியோ, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்தும் இன்னும் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

Published:Updated:
ராஜஸ்தான் கல்லூரி மாணவர்

நம்ம ஊரு, நம்மப் பக்கத்துக்கு ஊருனு, தேர்தல் கிட்ட நெருங்குறப்போ அந்தத் தொகுதிக்கே மொத தடவையா அரசியல்வாதிகளைப் பார்த்திருப்போம். அப்படி அந்தச் சமயத்துல ஓட்டுக்கேட்டு வர்ற அரசியல்வாதிங்க, டீக்கடையில நின்னு டீ ஆத்துறது, துணி துவைக்கிறது, தண்ணிக் குடம் தூக்குறது... முக்கியமா, ஓட்டுக்காக மக்களோட கால்ல விழுறதுனு நிறைய அலப்பறைகள் நடக்கும். அதைக் கண்கூடாக நாமும் பாத்து ரசிச்சிருப்போம். எல்லா அரசியல்வாதியும் அப்பிடி இல்லைனு வெச்சுக்கிட்டாலும், நிறைய அரசியல்வாதிங்க அப்பிடித்தான் இருக்காங்க. சரி அரசியல்வாதிங்கதான் அப்பிடி இருக்காங்கன்னு பாத்தா, ராஜஸ்தான்ல காலேஜ் பசங்க பலர், மாணவர் சங்கத் தேர்தல்ல ஜெயிக்கணும்னு சக மாணவிகள் கால்ல ஓட்டுக்கேட்டு விழுந்திருக்காங்க.

ராஜஸ்தான் கல்லூரி மாணவர்
ராஜஸ்தான் கல்லூரி மாணவர்

அப்படிப் பசங்க ஓட்டுக்கேட்டு, மாணவிகள் கால்ல விழுற அந்த வீடியோ ட்விட்டரில் பெரும் வைரலாகிட்டு வருது. அந்த வீடியோவுல, பசங்க மாணவிகள்கிட்ட கையெடுத்து கும்பிடுறதையும், கால்ல விழுறதையும், மாணவிங்க ஒதுங்கி ஒதுங்கிப் போறதையும் பார்த்து, நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்கள்ல தங்களோட கருத்துகள் மூலமா கலாய்ச்சுக்கிட்டிருக்காங்க. அதுலயும் நெட்டிசன் ஒருத்தர், ``இன்னைக்கு இந்த மாணவர் தலைவர்கள் வாக்காளர்களோட காலடியில இருக்கிறாங்க. நாளைக்கு இந்த வாக்காளர்கள், தலைவர்கள்கிட்ட யாசகம் செய்வாங்க’’னு தன்னோட கருத்தைப் பதிவிட்டிருக்காரு. பெரும் வைரலாகி வரும் இந்த வீடியோ, ஒரு லட்சத்துக்கும் மேல பார்வையாளர்களைக் கடந்து இன்னும் வைரலாகிக்கிட்டுஇருக்கு.