Published:Updated:

ஓவர் நைட்டில் சூப்பர் ஹீரோ; உயிரைப் பணயம்வைத்து தீயிலிருந்து 5 பேரை மீட்ட பீட்ஸா டெலிவரி மேன்!

தீயிலிருந்து 5 பேரை மீட்ட பீட்ஸா டெலிவரி மேன்

பற்றியெரியும் வீட்டில் சிக்கிக்கொண்ட 5 பேரை, பீட்ஸா டெலிவரி செய்யும் 25 வயது நபர் ஒருவர் தன் உயிரைப் பணயம்வைத்துக் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் வியக்கவைத்திருக்கிறது.

பொதுவாக எங்காவது கட்டடமோ, வீடோ தீப்பற்றி எரிந்தால், திடீரென எங்கிருந்தோ ஒருவர் பறந்துவந்து, தீயில் சிக்கிக்கொண்டவர்களை உயிரைப் பணயம்வைத்து மீட்பது போன்ற காட்சிகளைத் திரைப்படங்களில் பார்த்திருப்போம். அவர்களை `சூப்பர் ஹீரோக்கள்’ என்றும் நாம் அழைப்போம். ஆனால், யதார்த்தத்தில் அப்படியான சம்பவங்கள் நடப்பது கொஞ்சம் அரிதுதான். அப்படி நிஜத்தில் அரிதாக நடந்த சம்பவம் ஒன்றின் மூலம், பீட்ஸா டெலிவரி செய்யும் நபர் ஒருவர் `சூப்பர் ஹீரோ' என இணையவாசிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுவருகிறார். அமெரிக்காவில், பற்றியெரியும் வீட்டில் சிக்கிக்கொண்ட ஐந்து பேரை, பீட்ஸா டெலிவரி செய்யும் 25 வயது நபர் ஒருவர் தன் உயிரைப் பணயம்வைத்துக் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் வியக்கவைத்திருக்கிறது.

குழந்தையை மீட்டுவரும் நிக்கோலஸ் போஸ்டிக்
குழந்தையை மீட்டுவரும் நிக்கோலஸ் போஸ்டிக்

அமெரிக்காவின், இண்டியானாவிலுள்ள லஃபாயெட்டில் கடந்த 11-ம் தேதி நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், பீட்ஸா டெலிவரி செய்பவரான நிக்கோலஸ் போஸ்டிக், தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த வீட்டிலிருந்த இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று இளைஞர்களைக் காப்பாற்றியிருக்கிறார். இது தொடர்பாக லஃபாயெட் போலீஸ் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், நிக்கோலஸ் போஸ்டிக் பற்றியெரியும் அந்த வீட்டிலிருந்து முதலில் ஒரு குழந்தையை மீட்டுவந்து அங்கிருந்த போலீஸிடம் ஒப்படைக்கிறார். அடுத்தடுத்து மற்ற நான்கு பேரையும் நிக்கோலஸ் பத்திரமாக மீட்டுவிடுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிக்கோலஸ் போஸ்டிக் - பீட்சா டெலிவரி நபர்
நிக்கோலஸ் போஸ்டிக் - பீட்சா டெலிவரி நபர்

பின்னர் இந்த மீட்பு நடவடிக்கையில், கையில் பலத்த காயமடைந்த நிக்கோலஸுக்கு போலீஸார் முதலுதவி செய்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.

நிக்கோலஸின் இத்தகைய தன்னலமற்ற செயலால், இணையவாசிகள் பலரும் அவரை `சூப்பர் ஹீரோ' என்று பாராட்டி வருகின்றனர். அதில் ஒருவர் ``நிக்கோலஸ் என்றாவது ஒரு நாள் தன் பேரக்குழந்தைக்குக் கதை சொல்லக்கூடும். அதற்கான ஹீரோ ஸ்கிரிப்ட் இங்கு இருக்கிறது" என்று நிக்கோலஸை புகழ்ந்திருக்கிறார்.