Published:Updated:

Viral Video: காயமடைந்த குரங்கு, கிளினிக்குக்கு வந்து சிகிச்சை பெற்றதா? - ஆச்சர்ய சம்பவம்!

அடிபட்ட குரங்கு ( ட்விட்டர் )

பீகாரில் பெண் குரங்கு ஒன்று காயம்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

Viral Video: காயமடைந்த குரங்கு, கிளினிக்குக்கு வந்து சிகிச்சை பெற்றதா? - ஆச்சர்ய சம்பவம்!

பீகாரில் பெண் குரங்கு ஒன்று காயம்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

Published:Updated:
அடிபட்ட குரங்கு ( ட்விட்டர் )

பீகாரின் சசராம் பகுதியில் ஷஜமா என்ற இடத்தில் கிளினிக் ஒன்று உள்ளது. இதில் அகமது என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரது கிளினிக்குக்கு எதிர்பாராத விதமாக இரண்டு நோயாளிகள் வருகை புரிந்திருந்தனர். அகமதின் கிளினிக்குக்கு பெண் குரங்கு ஒன்று குட்டியைத் தூக்கிக் கொண்டு, தன்னுடைய காயத்துக்கு சிகிச்சைப் பெறுவதற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

குரங்கு கிளினிக்கில் சிகிச்சைப் பெறும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள், ``கடந்த செவ்வாய்கிழமை நண்பகல் வேளையில், ஒரு பெண் குரங்கு அடிபட்ட நிலையில் அந்த கிளினிக் அருகில் நின்று கொண்டிருந்தது. அப்போது மருத்துவர் அதை கிளினிக்குக்குள் வரும்படி சைகை செய்தார். அதையடுத்து, அந்த பெண் குரங்கு தன் நெஞ்சோடு ஒரு குட்டி குரங்கை அணைத்தபடி கிளினிக்குக்குள் நுழைந்தது. இதனை கண்ட மருத்துவர் அகமது முதலில் அச்சமடைந்தார்.

அதன் பிறகு, அந்த குரங்கின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதை கண்ட மருத்துவர் அந்த காயத்துக்கு மருந்து போட்டார். மேலும் டெட்டானஸ் ஊசியும் போட்டார். அந்த குரங்கு அமைதியாக ஒரு இடத்தில் படுத்துக் கொண்டது. இது தொடர்பாக தகவலறிந்த பொதுமக்கள் கிளினிக்குக்கு வந்து குவியத் தொடங்கி விட்டனர். ஆனால், அந்த குரங்கு மக்கள் கூட்டத்தைப் பார்த்து கொஞ்சமும் மிரளவில்லை. அமைதியாக ஓய்வெடுத்துவிட்டு, பின்னர் குட்டியை தூக்கிக் அங்கிருந்து சென்றது" என்றனர்.

இந்தச் சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism