Published:Updated:

`லாக்டெளன்... ஆடம்பரக் காரில் டிரைவ்!’ - இளைஞருக்கு விநோத தண்டனை கொடுத்த ம.பி போலீஸ்

இந்தூர்
இந்தூர்

மத்திய பிரதேசத்தில் போர்ஷே காரில் வலம் வந்த இளைஞரை மடக்கிப்பிடித்த காவல்துறையினர் தோப்புக்கரணம் போடச் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.

போர்ஷே காருடன் இளைஞர் ஒருவர் சாலையில் தோப்புக்கரணம் போடும் வீடியோ இணையத்தில் வைரலானது. போர்ஷேவில் அந்த ரக காரின் விலை ரூ.1 கோடிக்கு மேல். கோடீஸ்வரர்கள் பயன்படுத்தும் இந்த காரும் வீடியோ வைரலாக ஒரு காரணம் எனக் கூறலாம். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இளைஞர்களால் இந்த ஊரடங்கு காலங்களில் வீட்டில் இருக்க முடிவதில்லை. ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளில் இருந்து டியோ ஸ்கூட்டர் வரை சாலையில் எடுத்து வந்து உலா வருகின்றனர் இந்த த்ரில்லர் பாய்ஸ். ஊரடங்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன் என ஊர் சுற்ற வரும் த்ரில்லர் பாய்ஸ்க்கு போலீஸார் ட்ரில் எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஊரடங்கு
ஊரடங்கு

’கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்குறேன் பாரு’ என்ற ரீதியில் போலீஸ் ட்ரெயின்ங்கில் கொடுத்த ட்ரில்களை எல்லாம் நம்ம த்ரில்லர் பாய்ஸ்களுக்கு அளிக்கின்றனர். `பல மணி நேர ட்ரில்களால் வலி தாங்காமல் கதறுபவர்களைப் பார்த்து என்னப்பா இந்த உடற்பயிற்சியே செய்ய முடியல கொரோனாவா எப்படிப்பா தாங்குவீங்கன்னு’ அட்வைஸ் செய்து அனுப்புகின்றனர் காவல்துறையினர். முகக்கவசம் போன்ற எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் போர்ஷே காரில் வந்த இளைஞரை மடக்கிப்பிடித்த காவல்துறையினர் தோப்புக்கரணம் போடச் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.

`மரணப்படுக்கையில் மனைவிக்கு சில வார்த்தைகள்!’ - அமெரிக்கக் கணவனின் கடைசி நிமிடங்கள்

வைரலான வீடியோவுக்கு சொந்தக்காரர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் தர்யானி மகன் சன்ஸ்கர் தர்யானி என்பது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ வைரலானது குறித்து ஆங்கில ஊடகத்தில் பேசியுள்ள சன்ஸ்கர் தர்யானி, ``நான் கம்பெனியில் இருந்து திரும்பி வரும்போது போலீஸார் என்னைத் தடுத்து நிறுத்தினர். நான் அவர்களிடம் பாஸ் காண்பித்தேன். அவர்கள் என்னை காரைவிட்டு கீழே இறங்குமாறு கூறினர். நான் சொல்வதைக் கேட்காமல் கடுமையாக நடந்துகொண்டனர். நான் சொல்வதை அவர்கள் செவிகொடுத்து கேட்பதாக இல்லை. என்னை தோப்புக்கரணம் போடச் செய்து அதை வீடியோவாகப் படம் எடுத்து நகைச்சுவையாகப் பேசிக்கொண்டு என்னை விடுவித்தனர்” என்றார்.

சன்ஸ்கர் தர்யானி
சன்ஸ்கர் தர்யானி
`வாழ்க்கை கொடுத்தவர்கள்; ஆபத்தில் விடமாட்டார்கள்’ - கோவிட்-19 பிளாஸ்மா தானமளித்த முதல் இந்திய பெண்

இதுகுறித்து பேசிய இந்தூர் காவல்துறை உயர் அதிகாரிகள், ``ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றுபவர்களைத்தான் நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம். அந்த நபர் முகக்கவசம் அணியாமல் வந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அதன் காரணமாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செக்போஸ்ட்களில் காவல்துறையினர் பாதுகாப்புப் படையினர் எனக் கலவையாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்” என விளக்கம் அளித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு