Published:Updated:

கேரள முதிய தம்பதியின் லாக்டௌன் கால கிரிக்கெட்! #ViralVideo

கிரிக்கெட் விளையாடும் தம்பதி
கிரிக்கெட் விளையாடும் தம்பதி

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த வயதான தம்பதி தங்கள் வீட்டின் முன்பாக உள்ள இடத்தில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். அதை அவர்களின் பேரக் குழந்தைகள் வீடியோ எடுத்து வெளியிட, வைரலாகிப் போனது. 

கொரோனா நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதனால், பொழுதுபோக்கு இல்லாமல் மக்கள் வீட்டுக்குள்ளாகவே முடங்கிக் கிடக்கிறார்கள். 

பேட்டிங் செய்யும் பிந்து டீச்சர்
பேட்டிங் செய்யும் பிந்து டீச்சர்

பொதுமக்கள் வேலைக்குச் செல்ல முடியாததால் புத்தகங்கள் வாசிப்பது, தொலைக்காட்சி சேனல்களைப் பார்ப்பது மற்றும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுடன் நேரத்தைப் போக்குவது எனச் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த மூத்த தம்பதி கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி உள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கிறது மேலத்தூர் கிராமம். பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்திருக்கும் இந்தக் கிராமம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏராளமான ஆயுர்வேத வைத்தியர்கள் இந்தக் கிராமத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 

சோர்வடைவதில் இருந்து தப்பிக்க வழி! - க்வாரன்டீனில் இருப்பவர்களுக்கு புத்தகம் வழங்கும் காவல்துறை

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ராமன் நம்பூதிரியும் அவரின் மனைவியான ஓய்வுபெற்ற ஆசிரியையான பிந்து ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு தங்கள் வீட்டின் முன்பாக கிரிக்கெட் விளையாடினார்கள்.

ஒரு ரப்பர் மரத்தை ஸ்டெம்பாக பாவித்து அதன் முன்பாக ராமன் நம்பூதிரி பேட்டுடன் நிற்க, எதிர் முனையில் இருந்து பிந்து பந்தை வீசினார். சற்று நேரத்துக்குப் பின்னர், ராமன் நம்பூதிரி பந்தை வீச, அதை பிந்து அடித்தார். ஊரடங்கு காலத்தில் நேரப் போக்குக்காக இருவரும் கிரிக்கெட் விளையாடினார்கள். 

கிரிக்கெட் விளையாடும் முதியவரான பிந்து
கிரிக்கெட் விளையாடும் முதியவரான பிந்து

முதிய தம்பதி கிரிக்கெட் விளையாடியதைக் கண்ட அவர்களின் மகன்களும் பேரக் குழந்தைகளும் கூடச் சேர்ந்து சிறிது நேரம் விளையாடினார்கள். பின்னர், ராமனும் பிந்துவும் மட்டும் கிரிக்கெட் விளையாடுவதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டனர்.

வயதான கணவனும் மனைவியும் கொரோனா லாக்டௌன் காலத்தில், வீட்டின் எதிரில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. பலரும் அந்தத் தம்பதியைப் பாராட்டிப் பதிவிட்டிருந்தனர். 

பேட்ட்ங்கு செய்யும் ராமன் நம்பூதிரி
பேட்ட்ங்கு செய்யும் ராமன் நம்பூதிரி

அந்த வீடியோவை, விளையாட்டு சேனலான இஎஸ்பிஎன் தன்னுடைய அதிகாரபூர்வ வலைதளத்தில் பதிவிட்டது. அதனால் அந்த வீடியோ பலரின்  கவனத்தையும் பெற்றதுடன் பாராட்டையும் பெற்றது. 

வைரல் வீடியோவைப் பார்த்த அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வான வி.டி.பல்ராம், முதிய தம்பதியின் வீட்டுக்குச் சென்று பாராட்டியதுடன் அவர்களுக்கு பேட் மற்றும் பந்து பரிசாகக் கொடுத்தார். அத்துடன், அந்தத் தம்பதியுடன் அவரும் சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.

அடுத்த கட்டுரைக்கு