Published:Updated:

Kili Paul: `எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' - வைரல் பழங்குடி இளைஞனைக் கத்தியால் குத்திய நபர்கள்!

கிலி பால்

கிலி பாலும், நீமா பாலும் தங்களது கைபேசியினை 10 கி.மீ சென்று சார்ஜ் செய்து வருவார்கள். இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியப் பாடலுக்கு நடனமாடி வைரலானவர்கள்.

Kili Paul: `எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' - வைரல் பழங்குடி இளைஞனைக் கத்தியால் குத்திய நபர்கள்!

கிலி பாலும், நீமா பாலும் தங்களது கைபேசியினை 10 கி.மீ சென்று சார்ஜ் செய்து வருவார்கள். இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியப் பாடலுக்கு நடனமாடி வைரலானவர்கள்.

Published:Updated:
கிலி பால்

இன்ஸ்டாகிராமில் தனது ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் கிலி பால். சமீபத்தில் தான் தாக்கப்பட்டதாக கிலி பால் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாகப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு பலரையும் அதிர்ச்சியடைச் செய்திருக்கிறது. கிலி பாலும், நீமா பாலும் உடன் பிறந்தவர்கள். இவர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள டான்சானியா நாட்டைச் சேர்ந்த பழங்குடியினர். இவர்கள் வசிக்கும் பகுதி மின்வசதி இன்றி இருப்பதால், தங்களது கைபேசியினை 10 கி.மீ வரை சென்று சார்ஜ் செய்து வருவார்கள். இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியப் பாடலுக்கு நடனமாடியும், பாடலுக்கேற்ப உதடுகளை அசைத்தும் பலரின் மனங்களை வென்று பல லட்சம் ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளனர்.

கிலி பால், நீமா பால்
கிலி பால், நீமா பால்

இவர்கள் தங்களது பாரம்பரிய உடையை அணிந்து வீடியோ செய்வதுதான் பலரின் கவனத்தை ஈர்ப்பதற்க்கு மிக முக்கிய காரணம். சமீபத்தில், டான்சானியாவிலுள்ள இந்திய உயர் ஆணையரினால் கிலி பால் கெளரவிக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. அதனைத் தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி கிலி பால் குறித்து பகிர்ந்த ட்வீட் வைரலானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த ஏப்ரல் 30-ம் தேதியன்று கிலி பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் தான் ஐந்து மர்ம நபர்களால் தாக்கபட்டுள்ளதாக பதிவிட்டார். கிலி பால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,

"நான் ஐந்து மர்ம நபர்களால் தாக்கப்பட்டேன். அவர்களிடமிருந்து என்னைத் தற்காத்துக் கொள்ளும் போது எனது வலது கையில் கத்தியால் கீறப்பட்டு ஐந்து தையல்கள் போட்டுள்ளேன். மேலும், கட்டைகளாலும் அவர்கள் என்னைத் தாக்கினார்கள்.

கிலி பால்
கிலி பால்

ஆனால், கடவுளுக்கு நன்றி, நான் என்னைக் காத்துக் கொண்டேன். இருவரையும் அடித்த பிறகு அவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார்கள். ஆனால், நான் காயமடைந்துவிட்டேன். எனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism