Published:Updated:

தூங்கினால் ரூ.5 லட்சம் பரிசு, தூங்கியே சாதித்த கொல்கத்தா பெண்; இப்படியெல்லாமா போட்டிகள்?

5 லட்சம் வென்ற கொல்கத்தா திரிபர்ண சக்ரவர்த்தி

தூங்குவதையே வேலையாகச் செய்த கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் ரூ.5 லட்சம் பரிசு வாங்கிய ஆச்சர்யக் கதை!

தூங்கினால் ரூ.5 லட்சம் பரிசு, தூங்கியே சாதித்த கொல்கத்தா பெண்; இப்படியெல்லாமா போட்டிகள்?

தூங்குவதையே வேலையாகச் செய்த கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் ரூ.5 லட்சம் பரிசு வாங்கிய ஆச்சர்யக் கதை!

Published:Updated:
5 லட்சம் வென்ற கொல்கத்தா திரிபர்ண சக்ரவர்த்தி
`தூங்குவதெல்லாம் ஒரு வேலையா? இதற்குச் சம்பளமெல்லாம் வேறு தருவார்களா?' என்று எல்லோர் மனதிலும் கேள்வி எழுவது புரிகிறது. ஆம், `Wakefit.co' என்ற நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்லீப் இன்டர்ன்ஷிப் திட்டங்களை ஏற்பாடு செய்துவருகிறது.

இத்திட்டத்தில் ஸ்லீப் போட்டிகளை ஏற்பாடு செய்து அதிக நேரம் நன்றாகத் தூங்குபவர்களுக்கு மதிப்பெண் வழங்கி அதில் வெற்றி பெரும் நபர்களுக்குப் பரிசும் வழங்கி வருகிறது. அந்தவகையில் இதன் முதல் சீசன் முடிவடைந்த நிலையில் அதன் இரண்டாம் சீசன் சமீபத்தில் நடைபெற்றது.

பல கட்டமாக நடைபெறும் இப்போட்டியில் போட்டியாளர்களின் தூங்கும் நேரம், விழித்திருக்கும் நேரம், லேசான உறக்கம் மற்றும் ஆழ்ந்த உறக்கம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண் வழங்கப்படும். அதன்படி இறுதியாக, 4 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்குத் தேர்வாகி இருந்தனர். அதில் கொல்கத்தாவைச் சேர்ந்த திரிபர்ண சக்ரவர்த்தி வெற்றி பெற்று 5 லட்சம் பரிசாகப் பெற்றார். மற்ற இரண்டு இடங்களைப் பிடித்த போட்டியாளர்களுக்குத் தலா 1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், இதன் மூன்றாவது சீசன் விரைவில் நடைபெறும் என்று `Wakefit.co' நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு முதல் பரிசாக 10 லட்சம் வழங்கப்படும் என்றும் மொத்தம் 100 இரவுகளுக்கு நடைபெறும் இப்போட்டியில் ஓவ்வொரு இரவிலும் 9 மணிநேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.