Published:Updated:

பென்ஸ் கார் தொழிற்சாலைக்குள் 6 மணி நேரம் ஹாயாக உலவிய 3 வயது ஆண் சிறுத்தை! | வைரல் வீடியோ

Leopard in Benz Car Factory ( mid-day.com )

நல்லவேளையாக, சிறுத்தை கோபத்தில் இல்லை என்றும், அதன் உடலில் காயங்கள் இல்லை என்றும், அது வழிதவறியே பென்ஸ் தொழிற்சாலைக்குள் நுழைந்திருக்கிறது என்றும் வனத்துறை அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்.

பென்ஸ் கார் தொழிற்சாலைக்குள் 6 மணி நேரம் ஹாயாக உலவிய 3 வயது ஆண் சிறுத்தை! | வைரல் வீடியோ

நல்லவேளையாக, சிறுத்தை கோபத்தில் இல்லை என்றும், அதன் உடலில் காயங்கள் இல்லை என்றும், அது வழிதவறியே பென்ஸ் தொழிற்சாலைக்குள் நுழைந்திருக்கிறது என்றும் வனத்துறை அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்.

Published:Updated:
Leopard in Benz Car Factory ( mid-day.com )
நேற்று, பென்ஸ் அதிகாரப்பூர் வலைதளத்தில், ‘‘நமது பென்ஸ் தொழிற்சாலைக்கு ஒரு சிறப்பு விருந்தினர் வந்திருக்கிறார்’’ என்று ஜாலியாக ஒரு ட்வீட் வைரலாகிக் கொண்டிருந்தது.
அந்த விருந்தினர், ஒரு 3 வயது ஆண் சிறுத்தை!

பொதுவாக, ‘வனவிலங்குகள் ஊருக்குள்ளேயோ… வீட்டுத் தோட்டத்துக்குள்ளேயோ நுழைந்தன’ என்று ஃப்ளாஷ்நியூஸ்கள் வந்துதான் பார்த்திருப்போம். இப்போது லேட்டஸ்ட்டாக கார் தொழிற்சாலைக்குள்ளும் வனவிலங்குகள் புகுந்து உலா வர ஆரம்பித்துவிட்டன. புனே சக்கானில், 100 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது மெர்சிடீஸ் பென்ஸ் கார் நிறுவனத்தின் தயாரிப்புத் தொழிற்சாலை. இங்கே சுமார் 750–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நேற்று திங்கள் கிழமை காலை, திடீரென காலை ஷிஃப்ட் வந்த தொழிலாளர்கள், ஃபேக்டரிக்குள் மிஷின் சத்தத்தைத் தாண்டி வித்தியாசமாக ஓர் உறுமல் சத்தம் கேட்டு மிரண்டு போயினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Benz in Twitter
Benz in Twitter

சிறுத்தை ஒன்று பென்ஸ் தொழிற்சாலையின் பாடி ஷாப்பில் ஒவ்வொரு பென்ஸ் கார்களாகத் தரம் பார்த்துக் கொண்டிருந்தது. அலறியடித்த ஊழியர்கள், அலாரம் மணி ஒலிக்கவிட்டு, மற்ற செக்ஷன்களில் உள்ள நூற்றுக்கணக்கான ஊழியர்களையும் அலெர்ட் செய்திருக்கின்றனர். விஷயம் கேள்விப்பட்ட பென்ஸ் நிர்வாகம், சட்டென ஏகப்பட்ட பேருந்துகளை அமர்த்தி ஊழியர்களை வெளியேற்றிய சம்பவம், நேற்று முதல் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

உடனடியாக சக்கானில் உள்ள வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் 6 மணி நேரம் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடித்து, காட்டுக்குள் விட்டிருக்கிறார்கள். இந்தக் களேபரத்தில் பென்ஸ் ஊழியர்களுக்குத் திங்கள்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

‘‘நல்லவேளையாக எங்கள் ஊழியர்கள் யாருக்கும் எந்தக் காயமும் இல்லை. ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துவிட்டோம்’’ என்கிறார் பென்ஸின் உயர் அதிகாரி ஒருவர்.

‘‘அதிகாலை 5 மணிக்கு எங்கள் அலுவலகத்துக்கு ஒரு தொலைபேசி. ‘தொழிற்சாலைக்குள் சிறுத்தை நுழைந்துவிட்டது’ என்று பரபரப்பாகப் பேசினார் பென்ஸ் அதிகாரி. உடனடியாக நாங்கள் விரைந்தபோது, நல்லவேளையாக ஊழியர்களை வெளியேற்றி இருந்தார்கள். இருந்தாலும், சிறுத்தையைப் பிடிக்க எங்களுக்கு 6 மணி நேரத்துக்கும் மேல் ஆனது!’’ என்கிறார் சக்கான் வனத்துறை அதிகாரி யோகேஷ் மகாஜன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிடிபட்டது ஓர் ஆண் சிறுத்தை என்றும், அதற்கு 3 வயது என்றும் சொல்கிறார்கள். சக்கான் தொழிற்சாலையைச் சுற்றி கிழக்கும் மேற்குமாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிறைய உண்டு. 100 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள பென்ஸ் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள CCTV காட்சிகளைக் கொண்டு, ‘ஜுன்னார்’ என்கிற காட்டுப்பகுதிக்குள் இருந்துதான் அந்தச் சிறுத்தை வந்திருக்க வேண்டும் என்று உறுதியாகி இருக்கிறது. சில நேரங்களில் காட்டுக்குள் தங்கள் இனத்துடன் சண்டை போட்டு, காயத்துடன் சில வனவிலங்குகள் ஊருக்குள் வந்து விடும். அப்படி வரும் விலங்குகள் தோற்றுப் போன கோபத்தில் இருந்தால்… மனிதர்களைத் தாக்கும் அபாயம் உண்டு. ஆனால், நல்லவேளையாக, சிறுத்தை கோபத்தில் இல்லை என்றும், அதன் உடலில் காயங்கள் இல்லை என்றும்; அது வழிதவறியே பென்ஸுக்குள் நுழைந்திருக்கிறது என்றும் வனத்துறை அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். ஏற்கெனவே இந்தியாவில் புனேதான் சிறுத்தைகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் சண்டையில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம். காரணம், ஒரே மாதத்தில் Wagholi, Undri, Hinjewadi, Hadapsar போன்ற பல ஊர்களில் சிறுத்தைகள் கிராமத்துக்குள் புகுந்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், ஒரு கார் தொழிற்சாலைக்குள் வனவிலங்கு நுழைவது இதுதான் முதல்முறை என்கிறார்கள்.

Benz Car Factory
Benz Car Factory

ஜெர்மன் நிறுவனமான பென்ஸின் சக்கான் தொழிற்சாலையில், C-Class, E-Class, S-Class and CLA கூபே, Maybach S-Class செடான்கள் மற்றும் GLA, GLC, GLE and GLS போன்ற எஸ்யூவிகள் மேக்–இன்–இந்தியாவாகத் தயாராகி வருகின்றன. ஒரு நாளைக்கு இங்கே 700–க்கும் மேற்பட்ட கார்கள் ரெடியாகி வருகின்றன. அந்த ஆண் சிறுத்தையால் பென்ஸில் இருந்து 700 கார்கள் வெளிவரத் தாமதம் ஆகியிருக்கலாமோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism