Published:Updated:

`ஒரு சிங்கம்ன்னுகூட பார்க்காம...'- சீனாவின் சிங்கத்துக்குக் குவியும் வாவ் ரியாக்ஷன்ஸ்! ஏன் தெரியுமா?

சீனாவின் சிங்கத்துக்கு குவியும் வாவ் ரியாக்ஷன்ஸ்!

சிங்கத்தின் புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளத்தில் பகிரவும் அதற்கு பலவிதமான ரியாக்ஷன்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

`ஒரு சிங்கம்ன்னுகூட பார்க்காம...'- சீனாவின் சிங்கத்துக்குக் குவியும் வாவ் ரியாக்ஷன்ஸ்! ஏன் தெரியுமா?

சிங்கத்தின் புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளத்தில் பகிரவும் அதற்கு பலவிதமான ரியாக்ஷன்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Published:Updated:
சீனாவின் சிங்கத்துக்கு குவியும் வாவ் ரியாக்ஷன்ஸ்!

தெற்கு சீனாவின் Guangzhou உயிரியல் பூங்காவில் கியூட்டான ஹேர்கட் உடன் வலம் வருகிற வெள்ளை சிங்கம்தான் ட்விட்டரில் வைரல். சீனாவில் அந்தப் பூங்கா பக்கம் போன யாரோ சிங்கத்தின் புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளத்தில் பகிரவும் அதற்கு பலவிதமான ரியாக்ஷன்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

சிங்கம்
சிங்கம்

இந்தச் சிங்கத்தின் பெயர் ஹேங் (Hang). சிங்கத்துக்கு சிகை அலங்காரம் செய்துவிட்டவர்கள் யாரெனத் தேடப் போனால், Guangzhou உயிரியல் பூங்கா தரப்பில், "அது இயற்கையாகவே அமைந்தது. அதிகமா பனி பொழியுறதால அப்படியிருக்கு!" என்கிறார்கள்.

ஒரு பக்கம் மக்கள் வாவ் எமோஜிஸ், லவ் ஹார்டின்ஸ் எனப் பறக்கவிட்டு கொண்டிருந்தாலும், "அதெப்படிங்க சிங்கத்துக்கு இப்படி ஹேர்ஸ்டைல் தானாகவே அமையும்?" என மற்றொரு பக்கம் கம்பு சுத்தி கொண்டிருக்கின்றனர் மக்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிங்கம்
சிங்கம்

சிலர் புரூஸ் லீ, அண்டர்சென் பாக் ஆகியவர்களோடு ஒப்பிட்டு மீம்ஸ் பதிவிடுகிறார்கள். நன்றாக ட்ரிம் செய்யப்பட்டது போலான முடியோடு இப்போதுதான் சீயக்காய் தேய்து தலைக்குக் குளித்துவிட்டு வந்தது போலான ஹேர்ஸ்டைலில் இருக்கும் சிங்கத்தை மீம் மெட்டீரியலாக மாற்றி வைத்திருக்கின்றனர் நெட்டிசன்கள்.

இது அந்தச் சிங்கத்துக்குத் தெரியாம பார்த்துக்கோங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism