Published:Updated:

`வீடு தேடி பைப் வழியே மது' - மத்திய அரசின் புதிய திட்டமா? வைரலான தகவல்; விளக்கமளித்த அரசு

மாதிரி படம்

மது பைப்லைனில் வீடுகளுக்கு நேரடியாக சப்ளை செய்யப்படும் என்று வந்த செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

`வீடு தேடி பைப் வழியே மது' - மத்திய அரசின் புதிய திட்டமா? வைரலான தகவல்; விளக்கமளித்த அரசு

மது பைப்லைனில் வீடுகளுக்கு நேரடியாக சப்ளை செய்யப்படும் என்று வந்த செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Published:Updated:
மாதிரி படம்
`பைப்லைன் மூலம் வீடுகளுக்கே மதுபானம் சப்ளை செய்யப்படும்' என்கிற செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய அரசே மதுவை மக்களுக்கு வீடுகளுக்கே சப்ளை செய்யப்போவதாக சமூக வலைத்தளத்தில் செய்தி வைரலாகி இருக்கிறது. பைப்லைன் மூலம் மது வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் என்றும், மது எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள மின்சார மீட்டர் அருகில் மது மீட்டர் வைக்கப்படும் என்றும், ஒவ்வொரு மாதமும் கணக்கு எடுக்கப்பட்டு அதற்கு தக்கபடி மக்கள் மதுவிற்கான கட்டணத்தை செலுத்தவேண்டும் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தினமும் குடிப்பவர்களின் வசதிக்காக பிரதமர் இத்திட்டத்தை கொண்டு வந்திருப்பதாகவும், மது பைப்லைன் தேவைப்படுபவர்கள் ரூ.11 ஆயிரம் டெபாசிட் செலுத்தி பிரதமர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கவேண்டும் என்று அந்த வைரல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்தவர்களின் வீடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து மது இணைப்பு கொடுப்பார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த செய்தி நாடு முழுவதும் வைரலாகி வந்தது. உடனே மத்திய அரசு இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறது. அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்று அரசு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்பியது யார் என்பது குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டு இருக்கிறது. ஏற்கனவே இது போன்ற செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசு சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.