Published:Updated:

``என் டெத் சர்டிஃபிகேட்டை தொலைத்துவிட்டேன்!" - விளம்பரத்தில் ஷாக் கொடுத்த நபர்

விளம்பரத்தில் ஷாக் கொடுத்த நபர் ( twitter )

ஒருவர் தன்னுடைய இறப்புச் சான்றிதழை தொலைத்துவிட்டதாக, நாளிதழில் விளம்பரம் கொடுத்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

``என் டெத் சர்டிஃபிகேட்டை தொலைத்துவிட்டேன்!" - விளம்பரத்தில் ஷாக் கொடுத்த நபர்

ஒருவர் தன்னுடைய இறப்புச் சான்றிதழை தொலைத்துவிட்டதாக, நாளிதழில் விளம்பரம் கொடுத்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

Published:Updated:
விளம்பரத்தில் ஷாக் கொடுத்த நபர் ( twitter )

இன்றைய சோஷியல் மீடியா யுகத்தில் எங்கோ, யாரோ எதார்த்தமாகச் செய்யும் செயல்கள்கூட எதிர்ப்பார்க்காத அளவுக்கு திடீரென வைரலாகிவிடுகிறது. இதுவாடிக்கையாகவே, பலபேர் வைரலாகவேண்டும் என்பதற்காகவே எதாவது வித்தியாசமாக செய்கிறேன் என்று செய்து பல சமயங்களில் மொக்கை வாங்குவதும் உண்டு. இன்னும் சில பேர், தினசரி நாளிதழ்களில் வித்தியாசமாக விளம்பரம் செய்வதுமுண்டு.

சோஷியல் மீடியா
சோஷியல் மீடியா

அந்த வகையில், எப்படி ஒரு படத்தில் வடிவேலு,  `இங்க இருந்த என் கெணத்த காணோம்' என காமெடி செய்வதை போல, ஒருவர் தன்னுடைய இறப்புச் சான்றிதழை இழந்துவிட்டதாக, நாளிதழில் விளம்பரம் கொடுத்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது. இந்த விளம்பரத்தின் படத்தினை கடந்த ஞாயிறு அன்று, ஐ.பி.எஸ் அதிகாரி ரூபின் சர்மா என்பவர் `இந்தியாவில் மட்டும்தான் இது நடக்கும்' என்று குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

விளம்பரத்தில் ஷாக் கொடுத்த நபர்
விளம்பரத்தில் ஷாக் கொடுத்த நபர்

அவர் பதிவிட்டிருந்த அந்த படத்தில், ``என்னுடைய இறப்புச் சான்றிதழை 07/09/22 அன்று காலை 10 மணியளவில் லும்டிங் பஜாரில் இழந்துவிட்டேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பதிவு எண் மற்றும் பெயரும் அந்த விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், நெட்டிசன்கள் பலரும், ரூபின் சர்மாவின் இந்த ட்வீட்டுக்கு நகைச்சுவையாகப் பதில் ட்வீட் செய்துவருகின்றனர். அதில் ஒருவர், ``யாராவது அதைக் கண்டுபிடித்தால், அவரிடம் திருப்பித் தரவும். தயவுசெய்து இதை அவசரமாக எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் பேய் கோபப்படும்" என நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார்.