Published:Updated:

``புலிக்கே ஸ்பூன்-ஃபீடிங்கா... யாரு சாமி நீ?!" - இணையத்தில் வைரலாகும் வீடியோ

புலி ( ட்விட்டர் )

‘தி அமேசிங் டைகர்ஸ்’ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 1.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 33k லைக்குகளுடன் வைரலாகியுள்ளது.

ஒரு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற பேருந்து ஓட்டுநர் ஒருவர் புலிக்கு கறியை உணவாக அளிக்கிறார். அதை புலியும் அமைதியாக உட்கொண்டு செல்கிறது. இது தொடர்பான விடியோ இணையத்தில் வைரலாகப் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ‘தி அமேசிங் டைகர்ஸ்’ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 1.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 33k லைக்குகளுடன் வைரலாகியுள்ளது.

இந்த வைரல் வீடியோவில், அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஜன்னல் வழியாக புலியை அழைக்கிறார். அவர் குச்சியில் கறித்துண்டை மாட்டி ஜன்னல் வழியாக நீட்டுகிறார். புலியும் அமைதியாக ஜன்னல் அருகே வந்து, கறித்துண்டை சாப்பிடுகிறது. இதனை பேருந்துக்குள் இருந்த மற்றொரு நபர் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.

``புலியைக் கண்டாலே வயிற்றில் நம் அனைவருக்கும் வயிற்றில் புளியை கரைக்கும்.... ஆனால், இந்த நபரோ புலிக்கு ஸ்பூன் ஃபீடிங் செய்கிறார்" என அந்த ஓட்டுநரின் தைரியத்தை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.